13 வயசுல பாத்தேன்.. பாராட்ட வாரத்தையே இல்லாத உங்க நெருப்பை எடுத்து செல்வேன்.. கிங் கோலியை பாராட்டிய கில்

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்பட்ட விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினாலும் 2013க்குப்பின் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போதிலிருந்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்திய அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து அசத்தினார்.

மேலும் 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் 2016 – 2021 வரை இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக எதிரணிகளை சொல்லி அடித்து வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2018/19 டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்ததை மறக்க முடியாது. அந்தளவுக்கு இந்தியாவை வெளிநாடுகளில் வெற்றி நடை போடும் அணியாக மாற்றிய பெருமை விராட் கோலியைச் சேரும்.

- Advertisement -

விராட் கோலி ஓய்வு:

இருப்பினும் 2022க்குப்பின் கேப்டன்ஷிப் பொறுப்பை துறந்த விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினார். அதிலும் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் மிகவும் தடுமாற்றமாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி கேப்டன் ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள சுப்மன் கில் 13 வயதிலிருந்தே விராட் கோலியை பார்த்து தாம் வளர்ந்ததாக கூறியுள்ளார். மேலும் விராட் கோலியை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

நெருப்பை எடுத்துச் செல்வோம்:

“பாஜி உங்களைப் பற்றி எதை எழுதினாலும் அந்த வார்த்தைகளால் நான் என்ன உணர்கிறேன் அல்லது நீங்கள் என்னுள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதை சொல்லாது. 13 வயதில் நீங்கள் பேட்டிங் செய்வதை பார்த்த நான் களத்தில் எப்படி உங்களால் இவ்வளவு எனர்ஜியை கொண்டு வர முடிகிறது? என்பதை ஆச்சரியப்பட்டேன். பின்னர் உங்களுடன் சேர்ந்து விளையாடிய போது யாரும் இவ்வளவு எனர்ஜியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன்”

இதையும் படிங்க: எபிக் கரியர்.. அந்த 2 விடயம் போதும் நீங்க ஒரு ட்ரூ லெஜண்ட்.. விராட் கோலியை பாராட்டி – ஏ.பி.டி நெகிழ்ச்சி

“நீங்கள் வருங்கால தலைமுறைகளுக்கு உத்வேகத்தை மட்டும் கொடுக்கவில்லை. லட்சக்கணக்கான மக்களின் மனதை மாற்றி வடிவமைத்துள்ளீர்கள். டெஸ்ட் போட்டிகள் உங்களுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய அதே நெருப்பை எங்களுடைய இந்த தலைமுறையும் முன்னோக்கி எடுத்துச் செல்வோம் என்று நம்புகிறேன். அனைத்திற்கும் நன்றி. மகிழ்ச்சியுடன் ஓய்வு எடுங்கள் விராட் கோலி பாஜி” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement