- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின், ஸ்மித் போனில் கொடுத்த.. இந்த ஆலோசனையே இங்கிலாந்தில் 754 ரன்ஸ் அடிக்க காரணம்.. கில் பேட்டி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் வெளிநாட்டு மண்ணில் பெரிய ரன்கள் குவித்திராத அவரை ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் பிசிசிஐ புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்தது. அப்போது வெளிநாட்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியற்றவரை கேப்டன் ஆக்கலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.

அந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் விளையாடிய கில் அபாரமாக பேட்டிங் செய்து 754 ரன்கள் குவித்தார். அதனால் 2 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவிய அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அத்துடன் இந்திய அணியை அடுத்ததாக தலைமைத் தாங்குவதற்கு தாம் சரியான கேப்டன் என்பதையும் அவர் நிரூபித்தார்.

- Advertisement -

சச்சின், ஸ்மித் ஆலோசனைகள்:

மேலும் டான் ப்ராட்மேனுக்கு பின் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்நிலையில் இங்கிலாந்து செல்வதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரிடம் ஆலோசனைகளைக் கேட்டதாக கில் தெரிவித்துள்ளார். அதுவே இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி 754 ரன்கள் அடிக்க உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு வெளியே சிறப்பாக செயல்படாததால் என் மேலே அழுத்தம் இருந்தது. இருப்பினும் என்னுடைய பயிற்சி, மனதளவிலான பலம், எந்த இடத்திற்கு நான் வருகிறேன் ஆகியவற்றில் மிகுந்த தன்னம்பிக்கையை உணர்ந்தேன். மேலும் சச்சின் சாருடன் நான் பேசினேன்”

- Advertisement -

சுப்மன் கில் வெளிப்படை:

“மேலும் குஜராத் ஐபிஎல் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேடிடம் இருந்து தொலைபேசி எண்ணைப் பெற்று ஸ்டீவ் ஸ்மித்திடம் பேசினேன். அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தை சொன்னார்கள். அதாவது பந்தை நேராக தடுத்து நிறுத்துங்கள் மற்றும் ஸ்கொயர் பகுதியில் ஸ்கோர் செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்” எனக் கூறினார்

இதையும் படிங்க: நம்பர் ஒன் இந்தியா செய்றதெல்லாம் 3ம் தரம் வேலை.. இதே ஜெய் ஷா’ன்னா பாகிஸ்தான் விடுமா? பசித் அலி கேள்வி

இதைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையில் இந்தியா சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ளது. அத்தொடரில் கொஞ்சம் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா தோற்கடிக்கும் என்று நம்பப்படுகிறது. அடுத்ததாக இந்தியா மீண்டும் சொந்த மண்ணில் உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -