- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் பாயிடம் கத்துக்கிட்ட இந்த 2 கேப்டன்ஷிப் விஷயங்களை.. இங்கிலாந்தில் யூஸ் பண்ணுவேன்.. கில் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் பேட்டிங்கில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை.

அதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்ற அவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். எனவே கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வெற்றி நடை போட வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

- Advertisement -

ரோஹித், விராட் ஸ்டைல்:

இந்நிலையில் கேப்டன்ஷிப் பற்றி தன்னுடைய முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடம் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளதாக சுப்மன் கில் கூறியுள்ளார். அதைப் பயன்படுத்தி இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“விராட் பாய் கீழே விளையாடிய போது களத்திலோ அல்லது யோசனைகளிலோ அல்லது சிந்தனையிலோ அவர் எடுக்கும் முன் முயற்சிகள் எனக்குப் பிடித்த ஒன்றாகும். அது நானும் எடுத்துக் கொள்ள விரும்பும் ஒன்றாகும். அதை விட ஒரு திட்டம் வேலை செய்யவில்லையென்று அவர் நினைத்தால் உடனடியாக வேறொரு திட்டத்தை வைத்திருப்பார். அது சம்பந்தமாக பவுலர்களை தொடர்பு கொண்டு என்ன வேண்டும் என்பதையும் அவர் தெரிவிப்பார்”

- Advertisement -

புதிய கேப்டன் கில்:

“மறுபுறம் ரோஹித் பாய் ஆக்ரோஷமாக இருக்க மாட்டார். ஆனால் அவர் தம்முடைய திட்டங்களில் ஆக்ரோசத்துடன் இருப்பார். தந்திரோபாயங்கள் அடிப்படையில் அவர் மிகவும் ஆக்ரோஷமான கேப்டன். போட்டிகளுக்கு முன்பாகவே அவர் அனைத்து வீரர்களிடமும் மிகவும் தெளிவான தொடர்புகளைக் கொண்டிருப்பார். அனைத்து வீரர்களிடமும் இருந்து என்ன வேண்டும் என்பதைப் பற்றி தொடர் துவங்குவதற்கு முன்பாகவும் முடிந்த பின்பும் அவர் தெளிவாக பேசி விடுவார்”

இதையும் படிங்க: டெல்லியில் நம்ப வெச்சு கழற்றி விட்ட விஷமானவர்கள் இருந்தாங்க.. ஆர்சிபி சர்ப்ரைஸ் பண்ணாங்க.. ஏபிடி பேட்டி

“சில நேரங்களில் ரோஹித் பாய் உங்களை கடிந்து கொண்டால் கூட நீங்கள் அதை உங்களுடைய இதயத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. அது தான் அவருடைய குணமாகும். கேப்டனாக அது நீங்கள் கொண்டிருக்க வேண்டிய சிறந்த பண்பாகும். உங்களிடம் அவர் கடினமாக நடந்து கொண்டால் அது அவருடைய இதயத்தில் இருந்து வரவில்லை, அணியின் நன்மைக்காக வருகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது போன்ற சூழ்நிலையை நானும் இந்திய அணியில் கடைபிடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -