ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய மிகச்சிறந்த வெளிநாட்டு வீரர்களில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஏபி டீ வில்லியர்ஸ் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். குறிப்பாக ஆர்சிபி அணிக்காக நீண்ட வருடங்கள் விளையாடிய அவர் 5000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார். இப்போதும் பெங்களூரு அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது வென்றவராக ஏபி டீ வில்லியர்ஸ் சாதனை படைத்துள்ளார்.
அந்தளவுக்கு ஐபிஎல் தொடரில் மேட்ச் வின்னராக செயல்பட்ட அவர் ஆரம்பக்கட்ட வருடங்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது 2009 ஐபிஎல் தொடர் தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு நகர்த்தப்பட்டது. அங்கே தம்முடைய சொந்த நாட்டில் அட்டகாசமாக விளையாடிய அவர் 465 ரன்கள் குவித்து அசத்தினார்.
விஷமான மனிதர்கள்:
இருப்பினும் 2010இல் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்காத டெல்லி நிர்வாகம் 2011 ஐபிஎல் ஏலத்தில் கழற்றி விட்டது. அந்த ஏலத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் அவரை வாங்கியது மிகச்சிறந்த முடிவாக அமைந்தது. இந்நிலையில் தம்முடைய ஐபிஎல் கேரியரில் டெல்லி அணி விஷமான மனிதர்கள் நிறைந்த இடம் என்று ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு பெயர்களைக் கொடுப்பதை நான் வெறுக்கிறேன். டெல்லி டேர்டெவில்ஸ் எனும் சிதைந்து போன இடத்தில் எரியும் மனிதர்கள் இருந்தது உங்களுக்குத் தெரியும். அந்த அணியில் நிறைய விஷமான கேரக்டர்கள் இருந்தனர். டெல்லி அணியில் நிறைய ஜாம்பவான்கள் இருந்தது நல்ல நினைவுகளாக அமைந்தது”
சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்சிபி:
“கிளன் மெக்ராத், டேனியல் வெட்டோரி போன்ற நான் பார்த்து வளர்ந்த ஹீரோக்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களைப் பார்த்து கொஞ்சம் பயமாகவும் இருந்தது. 2008இல் என்னுடைய அருகில் அமர்ந்திருந்த மெக்ராத் நீங்கள் விளையாடும் விதம் எனக்கு பிடிக்கிறது என்று என்னிடம் சொன்னார். 2009 சீசன் நன்றாக அமைந்தது. அந்த வருடத்தை முழுவதும் நான் கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்காவில் விளையாடினேன்”
“அதனால் மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடுவேன் என்று நினைத்தேன். ஆனால் திடீரென அவர்களுக்காக நான் விளையாடவில்லை. அதனால் எனக்கு கலவையான உணர்வுகள் வந்தன. இத்தனைக்கும் டெல்லி அணிக்காக தக்க வைக்கப்படுவேன் என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதனால் நம்பிக்கையுடன் காத்திருந்த என்னுடைய பெயர் கடைசியில் ஏலத்தில் வந்தது . என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடர் சுப்மன் கில்லுக்கு ஒரு அக்னி பரீட்சை.. 3 ஆம் இடத்தில் அந்த வீரர் ஆடனும் – திலீப் தோஷி கருத்து
“பின்னர் ஆர்சிபி அணிக்கு சென்ற போது அவர்கள் என்னை அனைத்துப் போட்டியிலும் விளையாட விரும்பினார்கள். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் நீங்கள் இங்கே கிரேட் பிளேயாராக வளரப் போகிறீர்கள் என்ற வகையில் எனக்கு ஆதரவைக் கொடுத்தார்கள்” எனக் கூறினார்.



