- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோத்தாலும் பெருமைப்படுறேன்.. இந்தியா தோற்க இதான் 3 காரணம்.. ஆட்டமே இப்போ தான் ஆரம்பமாகுது.. கில் பேட்டி

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்தியா போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியாவும் 387 ரன்கள் அடித்ததால் ஸ்கோர் சமநிலை பெற்றது. அதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்தை 192 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டாப் ஆர்டரில் 33 ரன்களை எடுத்த ராகுலை தவிர்த்து ஜெய்ஸ்வால் 0, கருண் நாயர் 14, கேப்டன் கில் 6, பண்ட் 9, சுந்தர் 0, நிதிஷ் ரெட்டி 13 என மற்ற பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்கத் தவறினார்கள். அதனால் பும்ரா, சிராஜை வைத்துக்கொண்டு போராடிய ஜடேஜா 61* ரன்கள் எடுத்தும் இந்தியா 170 ரன்களை மட்டுமே எடுத்தது. மறுபுறம் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

இந்நிலையில் தோற்றாலும் இப்போட்டியில் கடைசி விக்கெட் வரை போராடியதை நினைத்து பெருமையடைவதாக இந்திய கேப்டன் கில் தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் மட்டுமே எடுத்து முன்னிலை பெற தவறியதும், 4வது நாள் மாலையில் 2 விக்கெட்டுகள் விழுந்ததும் தோல்விக்கு காரணமானதாக அவர் கூறியுள்ளார். 5வது நாளில் இங்கிலாந்து தங்களை ஒரு 50 – 60 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கூட அமைக்க விடாததும் தோல்வியைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிருந்து தான் ஆட்டம் உண்மையில் ஆரம்பமாவதாக தெரிவிக்கும் கில் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “5 நாட்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடினோம். வெற்றிக்கு கடைசி நேரத்தில் கடைசி விக்கெட் வரை போராடும் அளவுக்கு நாங்கள் போட்ட அற்புதமான முயற்சியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எங்களுடைய பேட்டிங் வரிசையை வைத்து சேசிங் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் எங்களை தொடர்ந்து அட்டாக் செய்தனர்”

- Advertisement -

ஆட்டம் ஆரம்பம்:

“டாப் ஆர்டரில் சில 50 – 60 பார்ட்னர்ஷிப் அமைக்க விரும்பினோம். எங்களை விட இங்கிலாந்து சிறப்பாக விளையாடியதால் அதை செய்ய முடியவில்லை. இலக்கு பெரியதாக இல்லை என்பதால் ஒரு 50 – 60 பார்ட்னர்ஷிப் வந்திருந்தால் கூட நாங்கள் மீண்டும் வந்திருப்போம். அனுபவமிக்க ஜடேஜாவுக்கு எந்த மெசேஜும் கொடுக்கத் தேவையில்லை. டெயில் எண்டர்களுடன் சேர்ந்து முடிந்தளவு அவர் நீண்ட நேரம் விளையாடுவதை நம்பினேன்”

- Advertisement -

“கடைசி நாளில் 150 – 200 ரன்களை சேசிங் செய்வது கடினம் என்பதால் முதல் இன்னிங்க்ஸில் 80 – 100 ரன்கள் முன்னிலை பெறுவது முக்கியமாக இருந்தது. நேற்றைய நாளின் மாலையில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டுகள் விடாமல் இருந்திருக்க வேண்டும். இன்று காலையிலும் திட்டத்துடன் வந்த நாங்கள் ஒரு 50+ பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் சேசிங் எளிதாக இருந்திருக்கும்”

இதையும் படிங்க: இந்த ஸ்டீவ் பக்னர் அம்பயர் இருக்கும் வரை இந்தியாவால் ஜெய்க்க முடியாது.. வெளிப்படையாக விமர்சித்த அஸ்வின்

“சில நேரங்களில் நீங்கள் நன்றாக விளையாடியதை ஸ்கோர்கார்ட் சொல்லாது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். இங்கிருந்து தான் இந்தத் தொடர் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பதை விரைவில் அறிவீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -