இந்த ஸ்டீவ் பக்னர் அம்பயர் இருக்கும் வரை இந்தியாவால் ஜெய்க்க முடியாது.. வெளிப்படையாக விமர்சித்த அஸ்வின்

R Ashwin
- Advertisement -

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1 (5) என முன்னிலை பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் பால் ஃரைபல் முதன்மை அம்பையராக செயல்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக செயல்பட்ட நிறைய அனுபவமிக்க அவர் அப்போட்டியில் நிறைய தருணங்களில் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கினார். குறிப்பாக ஜோ ரூட்டுக்கு எதிராக சிராஜ் வீசிய ஒரு பந்தில் எல்பிடபிள்யூ முறையில் இந்திய வீரர்கள் விக்கெட் கேட்டனர். அப்போது அவர் விக்கெட் தர மறுத்ததைத் தொடர்ந்து இந்தியா ரிவியூ செய்தது.

- Advertisement -

புதிய ஸ்டீவ் பக்னர்:

அந்த சோதனையில் பந்து ஸ்டம்ப்பின் மீது உரசியலால் ஒருவேளை நடுவர் அவுட் கொடுத்திருந்தால் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருக்கும். இருப்பினும் முதன்மை தீர்ப்பு நாட் அவுட்டாக வழங்கப்பட்டதால் 3வது நடுவரும் அதே தீர்ப்பை வழங்கினார். ஆனால் மற்றொரு தருணத்தில் இந்திய கேப்டன் சுப்மன் கில் எட்ஜ் கொடுத்ததாக சொல்லி இங்கிலாந்து கேட்டதும் பால் ஃரைபல் விக்கெட்டை கொடுத்து விட்டார்.

அதை கில் சோதித்த போது பேட்டில் பந்து படாதது தெரிந்தால் 3வது நடுவர் நாட் அவுட் வழங்கினார். அதனால் ஸ்டீவ் பக்னர் போல பால் ஃரைபல் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் பால் ஃரைபல் நடுவராக இருக்கும் வரை இந்தியா வெல்லாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் விமர்சனம்:

இது பற்றி அஸ்வின் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பால் ஃரைபலிடம் நான் பேச விரும்புகிறேன். அவரிடம் அவுட் கொடுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் இந்திய பவுலர்கள் பவுலிங் செய்யும் போதெல்லாம் அவர் அதை நாட் அவுட் என்று கருதுகிறார். இந்தியா பேட்டிங் செய்யும் போதெல்லாம் அவர் அதை அவுட் என்று உணர்கிறார். இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல, அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அவர் அப்படி செயல்பட்டால் ஐசிசி இதை கவனிக்க வேண்டும்”

இதையும் படிங்க: 22 ரன்ஸ்.. அழுத சிராஜ்.. பாறை வீரனைப் போல போராடிய ஜடேஜா.. 39 வருட சாதனை சேசிங்கில் வீழ்ந்த இந்தியா

“ஏனெனில் ஒரு தருணத்தில் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே என்னிடம் இருக்கும் “செடன் கார்” சென்று வரும் அளவுக்கு இடைவெளி இருந்தது. அது தெளிவாக அவுட்டில்லை என்று தெரிந்தும் அவர் கொடுத்தார். அந்த தருணத்தை அருகிலிருந்து பார்த்த என்னுடைய தந்தை “பால் நடுவராக வரும் போது இந்தியா வெல்லாது” என்று என்னிடம் சொன்னார். பால் கொஞ்சம் நேரம் எடுத்து செயல்படலாம் என்று நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன் ஆகியோரும் தொலைக்காட்சியில் தெரிவித்தனர்” என்று கூறினார்.

Advertisement