- Advertisement -
ஐ.பி.எல்

15 ஓவர் பெஞ்சில் உட்காந்திருந்த அவர் திடீர்னு வந்து வெற்றியை பறிச்சுட்டாரு.. தோல்விக்கான 2 காரணம் பற்றி கில்

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 244 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97, ப்ரியான்ஸ் ஆர்யா 47, சசாங் சிங் 44* ரன்கள் எடுத்தனர்.

குஜராத்துக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய குஜராத் 20 ஓவரில் 232-5 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 74, கேப்டன் சுப்மன் கில் 33, ஜோஸ் பட்லர் 54, செர்பான் ரூதர்போர்ட் 46 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

போராடி வீழ்ந்த குஜராத்:

வெற்றிப் பெற்ற பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக அந்தப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு நிகராக குஜராத் அணியும் அடித்து நொறுக்கி இலக்கை நெருங்கி வந்தது. அப்போது 15, 16, 17வது ஓவர்களில் அபாரமாக பவுலிங் செய்த பஞ்சாப் 5, 8, 5 என 18 ரன்கள் மட்டுமே கொடுத்து குஜராத்தை மடக்கியது.

குறிப்பாக இம்பேக்ட் வீரராக உள்ளே வந்த விஜய்குமார் வைசாக் 15, 17வது ஓவரில் 5, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து பெரிய திருப்புமுனையை உண்டாக்கினார். இந்நிலையில் அந்த தருணமே தங்களது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக குஜராத் கேப்டன் கில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங், பௌலிங் ஆகிய இரண்டிலுமே வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பை நாங்கள் பெற்றோம்”

- Advertisement -

15 ஓவர் பெஞ்சில்:

“இருப்பினும் பந்து வீச்சில் நிறைய ரன்கள் கொடுத்தோம். களத்திலும் எங்களை நாங்களே கீழே தள்ளினோம். நடுப்பகுதியில் அந்த 3 ஓவரில் நாங்கள் 18 ரன்கள் மட்டுமே அடித்தோம். அதே போல பேட்டிங்கில் முதல் 3 ஓவரில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. நிறைய நல்ல விஷயங்களும் கிடைத்தன. அதனால் இந்தத் தொடருக்கு அது நல்ல துவக்கமாக அமையும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: என்னை விட ஒய்ட் யார்கர் பிளானை கொடுத்து பஞ்சாப் வெற்றிக்கு உதவியது அவர் தான்.. ஸ்ரேயாஸ் பேட்டி

“பெஞ்சில் 15 ஓவர்கள் அமர்ந்திருக்கும் யாரோ ஒருவர் (வைசாக்) இம்பேக்ட் வீரராக வந்து திடீரென அந்த யார்க்கர் பந்துகளை வீசுவது எளிது கிடையாது. எனவே தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசியதற்காக அவர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அஹ்மதாபாத் பிட்ச் எப்போதும் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாகவே இருக்கிறது. அதில் நீங்கள் 240 – 250 ரன்கள் அடிக்க முடியும். அதற்கு முன்பாக எதிரணியையும் நீங்கள் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -