ஆஸியிடம் மறுபடியும் இந்தியா தோற்க இதான் 2 காரணம்.. ரோஹித் மிஸ் பண்ணிட்டாரு.. கேப்டன் கில் வருத்தம்

Shubman Gill
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 264/9 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ரோஹித் சர்மா 73, ஸ்ரேயாஸ் ஐயர் 61, அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே பொறுப்பாக விளையாடி 46.2 ஓவரில் 265/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியா தோல்வி:

அதிகபட்சமாக மேத்தியூ ஷார்ட் 74, கூப்பர் கோன்லி 61* ரன்கள் அடித்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆஸ்திரேலியா வெல்ல உதவினார்கள். மறுபுறம் அர்ஷ்தீப், ராணா, சுந்தர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் புதிய கேப்டன் தலைமையில் இந்தியா இத்தொடரில் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியில் போதுமான ரன்கள் அடிக்காததே தோல்விக்கு முக்கிய காரணமானதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதே போல மேத்யூ ஷார்ட் ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்ச்சை முகமது சிராஜ் தவற விட்டது இந்தியாவின் தோல்வியை உறுதி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் நீண்ட நாட்கள் கழித்து விளையாடும் ரோகித் சர்மா இப்போட்டியில் நன்றாக துவங்கியும் சதத்தை தவற விட்டதாக கில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மிஸ் செய்த ரோஹித்:

இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இலக்கை கட்டுப்படுத்தும் போது சில கேட்ச்களை தவற விட்டால் வெற்றி பெறுவது எளிது கிடையாது. பந்து பழையதாக மாறிய போது பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாக மாறியது. முதல் போட்டியில் டாஸ் முக்கிய பங்காற்றியது. ஆனால் இம்முறை அது முடிவில் பெரிய பங்காற்றவில்லை”

இதையும் படிங்க: தரமான இந்திய அணியை வீழ்த்தியதில் ரொம்ப ஹேப்பி.. வெற்றிக்கு பிறகு – மிட்சல் மார்ஷ் மகிழ்ச்சி

“ஏனெனில் இரு அணிகளும் கிட்டத்தட்ட 50 ஓவர்கள் விளையாடின. பிட்ச் முதல் இன்னிங்சின் முதல் 10 – 15 ஓவர்கள் முடிந்த பின் நன்றாக செட்டிலானது. நீண்ட நாட்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது எளிது கிடையாது. ஆரம்பகட்ட சூழ்நிலைகள் கடினமாக இருந்தது. அதைத் தாண்டி ரோஹித் சர்மா விளையாடிய விதத்தில் மகிழ்ச்சி. கடினமான சூழ்நிலைகளை சமாளித்த அவர் பெரியார் கோரை மிஸ் செய்து விட்டார் என்று சொல்வேன்” எனக் கூறினார்.

Advertisement