- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை நினைச்சா எனக்கே கவலையா இருக்கு.. 20 – 30இல் என்னை நானே சாய்ப்பதை மாத்தனும்.. கில் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் ஒரு தரப்பினரால் பாராட்டப்படுகிறார். ஏனெனில் 2019இல் அறிமுகமான அவர் 2019 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இது போக இது போக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்த இளம் இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

மேலும் டி20 கிரிக்கெட்டிலும் அசத்திய அவரை ஒரு கட்டத்தில் இந்திய ரசிகர்களும் பிரின்ஸ் என்று அழைத்தார்கள். ஆனால் சமீப காலங்களில் தொடர்ச்சியாக அசத்துவதற்கு தடுமாறும் கில் சுமாராக விளையாடி வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டத்தால் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

ஒப்புக்கொண்ட கில்:

அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்த சுப்மன் கில் 2025 ரஞ்சிக் கோப்பையில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். ஆனால் அந்தப் போட்டியில் 4 ரன்களில் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தை அடித்து 102 ரன்கள் குவித்துப் போராடினார். ஆனாலும் மற்ற வீரர்கள் சுமாராக விளையாடியதால் பஞ்சாப் இன்னின்ஸ் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய தற்போதைய ஆட்டம் முன்னேற்றத்தை தராது என்பதை சுப்மன் கில் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே விரைவில் முன்னேறி அசத்துவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியதற்கு பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது. சிவப்பு நிற பந்தில் நான் விளையாடும் போதெல்லாம் 25 – 30 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெறுகிறேன்”

- Advertisement -

முன்னேற்றம் வேணும்:

“ஆனால் அந்த நேரத்தில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எனக்கு நானே போட்டுக்கொள்கிறேன். அதனால் தடுமாறி அவுட்டாகிறேன். இருப்பினும் என்னுடைய கிரிக்கெட்டை இப்படி நான் விளையாடி வளரவில்லை. சில நேரங்களில் சில நோக்கம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதை நான் இழந்து விடுகிறேன். நன்கு செட்டிலாகி விட்டதால் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எனக்கு நானே போடுவதே அதற்கு காரணமாகும்”

இதையும் படிங்க: 209 ரன்ஸ்.. அஜித், ஆண்ட்ரே, ஜெகதீசன், விஜய் சங்கர் அசத்தல்.. சண்டிகரை சாய்த்து 25 பெற்ற தமிழ்நாடு

“இந்தியாவுக்காக அடுத்த தொடரில் விளையாடுவதற்கு முன்பாக இடைவெளி என்றால் மீண்டும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவேன். அது எனக்கு உதவியாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணிக்காக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கில் விளையாட உள்ளார். அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் துணை கேப்டனாக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -