209 ரன்ஸ்.. அஜித், ஆண்ட்ரே, ஜெகதீசன், விஜய் சங்கர் அசத்தல்.. சண்டிகரை சாய்த்து 25 பெற்ற தமிழ்நாடு

Tamil Nadu Team
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கல்லூரி மைதானத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் மோதிய போட்டி ஜனவரி 23ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 301 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் முகமது அலி 40, நாராயண் ஜெகதீசன் 63 ரன்கள் குவித்தார்கள். அதே போல மிடில் ஆர்டரில் அனுபவ வீரர் பாபா அபாரஜித் 49, இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் சதத்தை விளாசி 106 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

- Advertisement -

தமிழ்நாடு அசத்தல்:

சண்டிகர் அணிக்கு அதிகபட்சமாக விசு காஸ்யப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்ததாக களமிறங்கிய சண்டிகர் அணியை சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாடு 204 ரன்களுக்கு சுருட்டி முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக சிவம் பம்பரி சதத்தை அடித்து 108 ரன்கள் குவித்தார். தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக அஜித் ராம் 5 விக்கெட்டுகளையும், கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

அடுத்ததாக களம் இறங்கிய தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்சில் மும்பை விட முன்னேறிய ஆட்டத்தை வெளிப்படுத்தி 305-5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் அரை சதத்தை அடித்து 89, விஜய் சங்கர் சதத்தை அடித்து 150* ரன்கள் குவித்து அசத்தினார்கள். சண்டிகர் அணிக்கு அதிகபட்சமாக ஜக்ஜித் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

டாப்பில் தமிழ்நாடு:

இறுதியில் 403 என்ற பெரிய இலக்கைத் துரத்திய சண்டிகர் அணியை மீண்டும் அபாரமாக பவுலிங் செய்த தமிழ்நாடு 193 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக கேப்டன் மனன் வோஹ்ரா 100* ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் கை கொடுக்கவில்லை. தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க: அஸ்வின் போல நின்ற பூரான்.. தோனி போல நேர்மைத்தன்மையை காட்டிய ஃபிளவர்.. அபுதாபியில் நெகிழ்ச்சி

அதன் காரணமாக தமிழ்நாடு 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சொந்த மண்ணில் அசத்தியது. இதையும் சேர்த்து குரூப் டி பிரிவில் 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள தமிழ்நாடு மொத்தம் 25 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் ஜொலிக்கிறது. அதனால் தமிழ்நாடு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதை அடுத்து தங்களுடைய கடைசிப் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வரும் ஜனவரி 30ஆம் தேதி தமிழ்நாடு எதிர்கொள்கிறது.

Advertisement