அதை செய்யலங்கிறதை ஒத்துகிறேன்.. அடுத்த 30 – 40 போட்டிக்குள் யார்ன்னு முன்னேறி காட்டுறேன்.. சுப்மன் கில் உறுதி

Shubman Gill 8
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரிலிருந்து புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இணைந்து செயல்பட உள்ளார். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டு சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் சுப்மன் கில்லை அவர் புதிய துணை கேப்டனாக தேர்ந்தெடுத்தது பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் கேப்டனாக விளையாடிய சுப்மன் கில் சுயநலத்துடன் நடந்து கொண்டதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

நிரூப்பிச்சு காட்டுறேன்:
அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார். ஆனால் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தம்முடைய செயல்பாடுகள் எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாக கில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் இந்தியா விளையாட உள்ள 30 – 40 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தம்முடைய தரத்தை முன்னேற்றி காட்டுவேன் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து விளையாடுவது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு முன்பு வரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் என்னுடைய செயல்பாடுகள் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை”

- Advertisement -

“இருப்பினும் முன்னோக்கிச் செல்லும் போது அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் 30 – 40 போட்டிகளில் விளையாட உள்ளோம் என்று நினைக்கிறேன். எனவே அவற்றைப் பயன்படுத்தி என்னுடைய பேட்டிங்கில் நான் முன்னேற்றத்தை சந்திப்பேன். அத்துடன் அணியாகவும் நாங்கள் முன்னேறுவோம். ஜெய்ஸ்வாலும் நானும் மகிழ்ச்சியுடன் ஒன்றாக பேட்டிங் செய்கிறோம்”

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் சண்டையிட்ட கம்பீரும் கோலியும் ஒன்னா சேந்தா இதைத் தான் செய்வாங்க.. ஆசிஷ் நெஹ்ரா

“குறிப்பாக ஷாட்டுகளை அடிப்பதில் நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். இடது – வலது கை ஜோடியான நாங்கள் இதற்கு முன் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் 2 முறை 150க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். எனவே எங்களுக்குள் நல்ல தொடர்பு இருக்கிறது. அவருடன் பேட்டிங் செய்வது வேடிக்கையாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி 27ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement