ஐபிஎல் தொடரில் சண்டையிட்ட கம்பீரும் கோலியும் ஒன்னா சேந்தா இதைத் தான் செய்வாங்க.. ஆசிஷ் நெஹ்ரா

Ashish Nehra 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட உள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாகவும் ஆலோசகராகவும் ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பின் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியின் நிலைமை என்னாகுமோ என்று பல ரசிகர்கள் கவலையடைந்தனர். ஏனெனில் ஒரே மாநிலத்தில் பிறந்து நாட்டுக்காக ஒன்றாக விளையாடினாலும் 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் அவர் அண்டையில் ஈடுபட்டார். அப்படியே 10 வருடங்கள் கழித்து கொஞ்சமும் மாறாத அவர் 2023 ஐபிஎல் சீசனில் ஆலோசகராக விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்தார்.

- Advertisement -

ஒன்றாக ஒரே அணியில்:
இருப்பினும் 2024 சீசனில் தாமாக சென்று விராட் கோலியிடம் பேசிய கௌதம் கம்பீர் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலிக்கு மெசேஜ் செய்ததாக தெரிவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியும் கௌதம் கம்பீரம் எதிரெதிர் அணிகளில் இருந்தால் தான் மோதிக் கொள்வார்கள் என முன்னாள் இந்திய வீரர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே அணியில் அதுவும் நாட்டுக்காக விளையாடும் போது கண்டிப்பாக ஒன்றாக இணைந்து வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்றும் நெஹ்ரா கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் மிகவும் ஆர்வமுள்ள 2 நபர்கள். தங்களுடைய அணிக்காக விளையாடும் போதெல்லாம் அவர்கள் எதிரணிக்கு எதிராக திரும்புவார்கள். ஒரே அணியில் இருக்கும் போது அவர்கள் அணிக்காக ஒன்றாக இணைந்து விடுவார்கள். விராட் கோலி 16 – 17 வருடங்கள் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். கௌதம் கம்பீரும் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: மும்பை ரசிகர்களே எதிர்த்தாங்க.. பாண்டியாவுக்கு நாங்க இதை தான் செய்ய நினைச்சோம்.. மௌனம் கலைத்த பும்ரா

“வெளியில் பார்த்த சண்டைகளால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். சொல்லப்போனால் கம்பீர் – கோலி மட்டுமின்றி உலகின் பல வீரர்கள் களத்தில் சண்டை போட்டுள்ளனர். ஆனால் அதே வீரர்கள் நாளடைவில் ஒன்றாக ஒரே அணியில் நன்றாக விளையாடியுள்ளனர். கம்பீர் மிகவும் வெளிப்படையாக மனதில் உள்ளதை பேசுவார். அது மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக கேரியரில் தற்போதுள்ள நிலைமைக்கு விராட் – கம்பீர் ஆகியோரிடம் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement