இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா தொடர்ந்து 23வது வருடமாக வெஸ்ட் இண்டீஸை 10வது தொடரில் தோற்கடித்து அசத்தியுள்ளது.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற #வது போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 175/8 என தடுமாறியது. அதனால் வெஸ்ட் இண்டீஸை 200 ரன்களுக்குள் இந்தியா சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஃபாலோ ஆன் பின்னடைவு:
அப்போது டெய்ல் எண்டர்கள் ஆண்டர்சன் பிலிப் 24*, ஜெய்டேன் சீல்ஸ் 13 ரன்களை அடித்து வெஸ்ட் இண்டீஸை 248 ரன்கள் குவிக்க உதவினர். அந்தளவுக்கு டெல்லி பிட்ச் 3வது நாளில் பந்து வீசுவதற்கு சவாலாகவும் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவும் மாறியது. அதனால் 270 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா அந்த சூழ்நிலையில் சுதாரித்து மீண்டும் பேட்டிங் செய்து 500+ ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது இன்னிங்ஸ் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்தது. அதைப் பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் இத்தொடரில் முதல் முறையாக அபாரமாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து 390 ரன்கள் குவித்தது. அதனால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்த வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
கேப்டன் கில் விளக்கம்:
அதைத் துரத்திய இந்தியா 3 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது. ஆனால் ஒருவேளை அங்கே வெஸ்ட் இண்டீஸ்க்கு பதிலாக ஆஸ்திரேலியா போன்ற பலமான அணி இருந்திருந்தால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும் என்றே சொல்லலாம். எனவே இப்போட்டியில் இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்தது தவறான முடிவாகவே அமைத்தது.
இதையும் படிங்க: நிதீஷ் ரெட்டிக்கு இரண்டாவது டெஸ்டில் பந்துவீசாதது ஏன்? கேப்டன் கில் கொடுத்த விளக்கம் – விவரம் இதோ
இந்நிலையில் இப்போட்டியில் ஃபாலோவ் ஆன் கொடுத்ததற்கான காரணம் பற்றி கேப்டன் கில் தெரிவித்தது பின்வருமாறு. “நாங்கள் சுமார் 300 ரன்கள் முன்னிலையில் இருந்தோம். அந்த சமயத்தில் பிட்ச்சில் உயிர் இல்லாமல் இருந்தது. அதனால் ஒருவேளை நாங்கள் 500+ ரன்களை இலக்காக நிர்ணயித்தால் கடைசி நாளில் 6 – 7 விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நிலை வரும் என்று நினைத்தோம். அது கடைசி நாளில் எங்களுடைய வெற்றி கடினமாக்கி இருக்கலாம். அதுவே ஃபாலோ ஆன் கொடுத்ததற்கான பின்னணி சிந்தனையாகும்” என்று கூறினார் .



