கடைசி போட்டியில் 70 ரன்கள் அடித்தால் சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் மாபெரும் சாதனை – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்றுள்ளன.

சுப்மன் கில் நிகழ்த்த காத்திருக்கும் மாபெரும் சாதனை :

அதன் காரணமாக இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். அதனை தொடர்ந்து இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது வரும் ஜனவரி 18-ஆம் தேதி இந்தூர் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் இந்தூரில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த கடைசி போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்றாவது போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஒரு மாபெரும் சாதனையை ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்த காத்திருக்கிறார்.

அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் வைரலாகி வருகிறது. அப்படி சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 60 ஆட்டங்களில் விளையாடி 8 சதம் மற்றும் 17 அரைசதம் என 2930 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் மேலும் 70 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தனது 61-வது இன்னிங்ஸ்சில் 3000 ரன்களை பூர்த்தி செய்வார். அப்படி அவர் இந்த 70 ரன்களை அடுத்த போட்டியில் அடித்தால் இந்திய வீரர் சார்பாக குறைந்த போட்டிகளில் 3000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்த வீரராக இந்திய வீரராக சாதனை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தரின் இடத்தை நிரப்பப்போவது யார்? – போட்டியில் இருக்கும் 3 வீரர்கள்

இவருக்கு முன்னதாக முன்னாள் இந்திய வீரரான ஷிகர் தவான் 72 போட்டிகளில் 3000 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது.

Advertisement