நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடியிருந்த தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் பந்து வீசுகையில் விலா எலும்பு பகுதியில் காயமடைந்தார். இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது களமிறங்கிய அவர் ரன் ஓட முடியாமலும் அவதிப்பட்டார். இதனை கவனித்த கே.எல் ராகுல் அணி நிர்வாகத்திடம் வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து ஒரு தகவலை தெரிவித்து இருந்தார்.
வாஷிங்டன் சுந்தரின் இடத்திற்கு போட்டியில் இருக்கும் 3 வீரர்கள் :
அப்படி வாஷிங்டன் சுந்தருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது விலா எலும்பு பகுதியில் தீவிரமான காயம் ஏற்பட்டதால் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் விலகுவதாகவும் அவருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் இணைகிறார் என்றும் அறிவித்தது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டிக்கு இடம் கிடைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகிவுள்ள மற்றொரு அறிக்கையின் படி : வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்றுவீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இடம்பெறப்போகும் அந்த வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பார்க்கையில் தற்போது வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தினை பூர்த்தி செய்ய மூன்று வீரர்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அந்த மூன்று வீரர்கள் யாரெனில் :
ரியான் பராக், சபாஷ் அகமது மற்றும் க்ருனால் பாண்டியா ஆகிய மூவரில் ஒருவருக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் பேட்டிங் ஆர்டரில் பிற்பாதியில் களமிறங்கும் இவர்கள் பேட்டிங் செய்வதோடு மட்டுமின்றி பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களாகவும் செயல்பட முடியும். இதன் காரணமாக இந்த மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜடேஜா எனக்கு புடிச்ச வீரர் தான்.. ஆனாலும் அவருக்கு பதிலா இவர் விளையாடனும் – சீக்கா கருத்து
இருந்தாலும் அணியின் நிர்வாகம் இந்த விவகாரத்தில் என்ன முடிவை எடுக்கிறது? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



