உலகின் முதல் வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman-Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இதுவரை 47 ஒருநாள் போட்டிகள், 32 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக சதம் அடித்த வீரராக பார்க்கப்படும் இவர் அடுத்த எதிர்கால சூப்பர் ஸ்டாராகவும் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறார்.

சுப்மன் கில் நிகழ்த்தவுள்ள மாபெரும் சாதனை :

இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் சுமாரான ஆட்டத்தையே இவர் வெளிப்படுத்தி வந்தாலும் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக தற்போது வரை 47 போட்டியில் விளையாடியுள்ள அவர் 58 ரன்கள் சராசரியுடனும் 6 சதம் மற்றும் 13 அரைசதம் என 2328 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் சுப்மன் கில் அந்த தொடரில் இதுவரை எந்த ஒரு சர்வதேச வீரரும் படைக்காத மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் மேலும் 172 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 2500 ரன்களை 50 போட்டிகளுக்குள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் இந்த சாதனையையும் நிகழ்த்த அற்புதமான வாய்ப்பு அவருக்கு காத்திருக்கிறது.

இதையும் படிங்க : ஓய்வை அறிவிக்கப்போகிறாரா? ரவீந்திர ஜடேஜா.. ரசிகர்களை குழம்ப வைத்துள்ள – அவரின் லேட்டஸ்ட் பதிவு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை குவித்து வீரராக தென்னாப்பிரிக்க அணியின் வீரர் ஹாசிம் அம்லா 53 ஒருநாள் போட்டிகளில் 20500 குவித்து முதல் இடத்தில் இருக்கிறார். அந்த சாதனையை முறியடிக்க இவருக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement