அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின் முடிவில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை தொடர்ந்து ஜடேஜா ஓய்வுபெற உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓய்வை அறிவிக்கப்போகிறாரா ரவீந்திர ஜடேஜா? :
ஏனெனில் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜடேஜா தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் இந்திய அணியோ அடுத்த கட்ட ஸ்பின்னர்களை நோக்கி நகர்ந்துவிட்டது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலேயே பெரிய அளவில் வாய்ப்பை பெறாத ஜடேஜா சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாகவும் விளையாடவில்லை. மேலும் தற்போது ஜடேஜா 36 வயதை எட்டி விட்டதால் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல்க்கு அதிக வாய்ப்பினை வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக தற்போது முக்கிய முடிவை ஒன்றை எடுத்துள்ள ஜடேஜா அதனை புகைப்படமாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா மண்ணில் கடைசியாக அவர் விளையாடிய சிட்னி டெஸ்ட் போட்டியின் ஜெர்சியை தனது இன்ஸ்டாகிராமில் ஜடேஜா பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் அதுதான் நான் கடைசியாக விளையாடிய போட்டி என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளாரோ என்று தோன்றுகிறது. அதேபோன்று இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் தொடர்பானது ஆரம்பிப்பதற்கு ஆறு மாத கால இடைவெளி உள்ள வேளையில் ஜடேஜா நிச்சயம் ஓய்வு அறிவிப்பார் என்றே தெரிகிறது. அவர் தொடர்ந்து விளையாட நினைத்தாலும் அணியிலிருந்து நிர்வாகத்தின் மூலம் புறக்கணிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : இந்தியர்களை புறக்கணித்து சொன்னதை செய்யல.. அதான் கம்பீரை நயவஞ்சகர்ன்னு சொன்னேன்.. திவாரி விளாசல்
இதன் காரணமாகவே ஜடேஜா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எது எப்படி இருப்பினும் இதுவரை ஜடேஜா தரப்பிலிருந்து ஓய்வு குறித்து எந்த ஒரு முடிவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.