புஜாராவின் 3 ஆவது இடத்திற்கு சரியான மாற்றுவீரர் இவர்தான் – முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் கருத்து

pujara
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராது நடைபெற உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 4-ஆம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டியின் 12-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

INDvsSL

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் இடத்திற்கு இளம் வீரர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான மோசமான ஆட்டம் காரணமாக சீனியர் வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதால் அவர்களின் இடத்தை நிரப்பப்போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா மூன்றாவது வரிசையிலும், ரஹானே ஐந்தாவது வரிசையிலும் கடந்த பல ஆண்டு காலமாக விளையாடி வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

gill

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் புஜாராவிற்கு மாற்று வீரராக விளையாடப் போகும் அந்த சரியான வீரர் யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் தேவங்காந்தி கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவின் இடத்திற்கு சரியான மாற்று வீரராக சுப்மன் கில் தான் விளையாடுவார் என்று கருதுகிறேன்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடியுள்ள சுப்மன் கில் சதம் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக ரோஹித் மற்றும் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்றும் 3-வது இடத்தில் கில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எனக்கு வேற வழி தெரியல மன்னிச்சிடுங்க. பாண்டியாவிற்கும் குஜராத் அணிக்கும் நன்றி சொன்ன – ஜேசன் ராய் உருக்கம்

மேலும் ரஹானேவின் ஐந்தாவது இடத்தில் விஹாரி அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதில் விஹாரிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் வரும் மார்ச் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement