பும்ராவுக்கு வாய்ப்பில்லை.. புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தான்.. இதுதான் காரணம் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

Bumrah and Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ளது.

இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் :

அதன் பின்னர் இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அப்படி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். இந்நிலையில் ரோகித் சர்மா தற்போது ஓய்வு பெற்று வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக புதிய டெஸ்ட் கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி ரோஹித் வெளியேறியதற்கு பிறகு துணை கேப்டனான பும்ராவே அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் நிர்வாகம் பும்ராராவை தாண்டி சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை வழங்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பெற்று விளையாடும் பும்ரா பணிச்சுமை காரணமாகவும், காயம் காரணமாகவும் அடிக்கடி போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.

- Advertisement -

எனவே தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடும் மற்றும் நீண்டகால கேப்டனை நியமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிசிசிஐ சுப்மன் கில்லை புதிய டெஸ்ட் கேப்டனாக மாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 25 வயதாகும் சுப்மன் கில்லை எதிர்கால நிரந்தர கேப்டனாக நிர்வாகம் பார்ப்பதால் அவரை புதிய கேப்டனாக நியமித்தால் நீண்ட ஆண்டுகளுக்கு இந்திய அணியை அவரால் வழிநடத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறது.

இதையும் படிங்க : தரம்சாலா போட்டி பாதியிலேயே கைவிடப்பட உண்மையான காரணம் இதுதான் – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான விளக்கம்

இந்திய அணிக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 32 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் என 1893 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement