வாய்ப்பே கிடைக்காது என்று நினைத்த இளம்வீரருக்கு ராகுலின் காயத்தால் வந்த அதிர்ஷ்டம் – அவருக்கு ஜாலிதான்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஏற்கனவே சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள வேளையில் அணியின் முன்னணி இளம் வீரரான கே.எல்.ராகுலும் இந்த முதல் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

Rahul

- Advertisement -

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ்-யையும் தாண்டி இந்த விடயம் சுப்மன் கில்-க்கு ஒரு அருமையான வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் ராகுல் அணியில் இருந்திருந்தால் நிச்சயம் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோரே துவக்க வீரர்களாக விளையாடி இருப்பார்கள். இதன் காரணமாக சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாட நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். அப்படி அவரால் மிடில் ஆர்டரில் விளையாட முடியாத பட்சத்தில் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் தற்போது ராகுலும் காயமடைந்து வெளியேறி உள்ளதால் அகர்வாலுடன் நிச்சயமாக சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்குவது பிரகாசமாகியுள்ளது. மேலும் துவக்க வீரராக மட்டுமே டெஸ்டில் விளையாடி பழக்கப்பட்ட கில்லுக்கு இந்த வாய்ப்பு ஒரு அதிர்ஷ்டவசமான வாய்ப்பு என்றே கூறலாம்.

gill

ஒருவேளை இந்த தொடரில் ராகுல் விளையாடி இருக்கும் பட்சத்தில் சுப்மன் கில் விளையாடாமல் போயிருக்க கூட வாய்ப்பு இருந்தது. அந்த வேளையில் தற்போது ராகுலின் காயம் காரணமாக கில்லுக்கு மீண்டும் தனது இடம் கிடைத்துள்ளது அவருக்கு மகிழ்ச்சியான விடயம் என்றே கூறலாம். அதே வேளையில் மிடில் ஆர்டரில் இந்திய அணி வீரர்களை எவ்வாறு களமிறக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் – ராகுல் ஜோடிக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் ஓப்பனர்கள் – இவர்கள்தானாம்

இதுவரை இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 31 ரன்கள் சராசரியுடன் 414 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement