ரோஹித் – ராகுல் ஜோடிக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் ஓப்பனர்கள் – இவர்கள்தானாம்

Rohith

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கான்பூர் மைதானத்தில் நாளை மறுதினம் 25-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் கோலி ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளதால் ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த முதல் போட்டி முடிந்த பின்னர் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

INDvsNZ

மேலும் இத்தொடரில் சீனியர் வீரர்களான ரோகித்சர்மா, ரிஷப் பண்ட், முகமது சமி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இளம் வீரர்கள் பலர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக தற்போது ராகுலும் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ரோகித் ஓய்வில் இருப்பதனாலும் தற்போது ராகுல் காயம் காரணமாக வெளியேறி உள்ளதாலும் இந்திய அணியின் துவக்க ஜோடி முற்றிலும் புதிய ஜோடியாக இந்த போட்டியில் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gill

அதன்படி இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரர்களாக விளையாடியவர்கள் தான் என்பதால் இவர்களே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இந்த தொடரில் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் விளையாடி இருந்தால் நிச்சயம் அவர்கள் தான் ஓப்பனர்களாக விளையாடி இருப்பார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : காயம் காரணமாக விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு – அதிகாரபூர்வ தகவல்

அவர்கள் இருவருமே இந்த முதல் போட்டியில் விளையாடாத காரணத்தினால் தற்போது அகர்வாலுக்கும், கில்லுக்கும் மீண்டும் துவக்க வீரர்களாக களமிறங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை இந்த ஜோடி சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement