ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு சேர்த்து விராட் கோலியையும் பின்னுக்கு தள்ளிய – சுப்மன் கில்

Gill and Kohli
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை குவித்தது.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில் :

பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தாகத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 50 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 86 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றைய இந்த போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதோடு சேர்த்து ஆர்.சி.பி அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலியை பின்னுக்கு தள்ளி நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

இந்த தொடரை பொறுத்தவரை 228 ரன்கள் அடித்து விராட் கோலி முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் அடித்த 86 ரன்களின் மூலம் சுப்மன் கில் இந்த தொடரில் 251 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் 70,56,86 என மூன்று அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தேவ்தத் படிக்கல்லின் மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

இந்த தொடரை பொருத்தவரை 154 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியான ஆட்டத்தை சுப்மன் கில் வெளிப்படுத்தி வருகிறார். அதேபோன்று பந்துவீச்சு துறையை பொருத்தவரை குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா 5 போட்டிகளில் 11 விக்கெட்டை கைப்பற்றி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement