- Advertisement -
ஐ.பி.எல்

ஆமை மாதிரி மெதுவா பேட்டிங் செய்றீங்க ! கலாய்த்த ரசிகர்களுக்கு பல்ப் கொடுத்த நட்சத்திர வீரர்

ஐபிஎல் 2022 தொடர்பான எதிர்பாராத திருப்பங்களுடன் மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற 57-ஆவது லீக் போட்டி உண்மையாகவே எதிர்பாராத திருப்பங்களை கொடுத்தது. புனேவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களிலுள்ள வலுவான லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு 20 ஓவர்களில் வெறும் 144/4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஏனெனில் அந்த அணிக்கு தொடக்க வீரர் ரித்திமான் சாஹா 5 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேத்யூ வேட் 10 (7) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்களில் அவுட்டானதால் 51/3 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

கலக்கிய கில்:
அந்த நிலைமையில் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லருடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு பொறுப்பான 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டார். அதில் மில்லர் 26 (24) ரன்களில் ரன்களில் ஆட்டமிழந்தாலும் 7 பவுண்டரியுடன் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 63* (49) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட ராகுல் திவாடியா 22* (16) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 145 ரன்கள் இலக்கு தானே லக்னோ எளிதாக வென்று விடும் என எதிர்பார்த்த அனைவருக்கும் பந்துவீச்சில் மிரட்டிய குஜராத் ஆரம்பத்திலேயே குயின்டன் டி காக் 11 (10) கேஎல் ராகுல் 8 (16) ஆகிய முக்கிய முதுகெலும்பு வீரர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்து அசத்தியது. மேலும் அடுத்து வந்த கரண் சர்மா 4 (4) க்ருனால் பாண்டியா 5 (5) ஆயுஷ் படோனி 8 (11) மார்கஸ் ஸ்டோனிஸ் 2 (2) ஜேசன் ஹோல்டர் 1 (2) தீபக் ஹூடா 27 (26) என அனைவரையும் சொற்ப ரன்களில் காலி செய்த குஜராத் பவுலர்கள் 13.5 ஓவர்களில் லக்னோவை வெறும் 82 ரன்களுக்குள் சுருட்டினார்கள்.

- Advertisement -

கலாய்த்த ரசிகர்கள்:
குஜராத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மிரட்டிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 62 ரன் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த குஜராத் பங்கேற்ற 12 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்து ஐபிஎல் 2022 பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரபூர்வமாக தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் எளிய இலக்கை துரத்த தவறிய லக்னோ பங்கேற்ற 12 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்தாலும் 8 வெற்றிகளால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதியாக வைத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் பேட்டிங்கில் குஜராத் தடுமாறியபோது தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை நின்ற சுப்மன் கில் 63* (49) ரன்களை 128.57 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மெதுவாக ரன்களைக் குவித்தார்.

அதனால் குஜராத் 144 ரன்கள் மட்டுமே எடுத்ததால் முதல் இன்னிங்ஸ் முடிவின் போது நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆமை போல் மெதுவாக பேட்டிங் செய்கிறீர்கள் என்று அவரை வகைவகையாக கலைத்தனர். ஆனால் இறுதியில் பேட்டிங்க்கு கடும் சவாலாக இருந்த புனே பிட்ச்சில் கேஎல் ராகுல் உட்பட நட்சத்திர லக்னோ பேட்ஸ்மேன்கள் திணறி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை பார்த்தால் உண்மையாகவே அவர் பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்தார் என்று புரிந்து கொள்ள முடியும். அதன் காரணமாகவே ரஷித் கான் 4 விக்கெட்களை எடுத்தாலும் பேட்டிங்கில் முக்கியமான ரன்களைச் சேர்த்த சுப்மன் கில் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

பல்ப் கொடுத்த கில்:
அதன் வாயிலாக தன்னை கலாய்த்த ரசிகர்களுக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்று கூறலாம். குறிப்பாக ரசிகர்கள் கலாய்த்த கருத்துக்களை ஒன்று சேர்த்து “என்ன ஒரு சுயநலமான ஆட்டம்” என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு ஆட்டநாயகன் விருதை வென்ற பின் ஆமை மற்றும் முயல் ஆகிய ஸ்மைலிகளை பயன்படுத்திய கில் தக்க பதிலடி கொடுத்தார்.

அதாவது வேகத்தைவிட விவேகமே சிறந்தது என்பதை உணர்த்துவதற்கு ஆமை மற்றும் முயல் ஓட்டப்பந்தயம் செய்து இறுதியில் ஆமை வென்ற கதையை பலரும் கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் முரட்டுத்தனமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் தம்மால் அடிக்க முடியவில்லை என்றாலும் தனது அணி வெற்றி பெறுவதற்கு தேவையான அளவுக்கு அடிக்கும் திறமை தம்மிடம் உள்ளதாக தன்னை கலாய்த்த ரசிகர்களுக்கே சுப்மன் கில் பல்ப் கொடுத்துள்ளார்.

- Advertisement -
Published by