நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் போட்டிக்கு முன் நட்சத்திர இந்திய வீரருக்கு ஏற்பட்ட காயம் – விவரம் இதோ

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 16-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக ஏற்கனவே பெங்களூரு வந்தடைந்த இரு அணி வீரர்களும் தற்போது தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வீரருக்கு ஏற்பட்ட காயம் :

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரரான சுப்மன் கில் காயம் காரணமாக இந்த முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணிக்காக கடந்த பல தொடர்களாகவே மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடி வரும் அவர் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : தற்போது சுப்மன் கில் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியில் வலி இருப்பதாக நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக நாளை அவரது உடல்நிலை எவ்வாறு இருக்கும்? என்பதை கணித்த பிறகே அவர் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது தெரியும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இதன் காரணமாக சுப்மன் கில் ஒருவேளை விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் மூன்றாவது இடத்தில் அனுப்பபடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

கடந்த சில தொடர்களாகவே மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடி வரும் சுப்மன் கில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்றாலும் எதிர்கால நட்சத்திர வீரர் என்பதனால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி இந்திய அணி ஆதரவு அளித்திருந்த வேளையில் தற்போது அவர் காயம் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலியை வெச்சு எங்களையே எதுத்து பேசுறீங்களா? ஃபகார் ஜமானுக்கு பாகிஸ்தான் வாரியம் வைத்த ஆப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை அக்டோபர் 16-ஆம் தேதி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement