முறையாக தெரிவிக்கப்படாமல் திடீரென நிர்வாகம் எடுத்த முடிவால் சுப்மன் கில் அதிருப்தி – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடமளிக்கப்பட்டு 15 பேர் கொண்ட முழு வீரர்களின் பட்டியலையும் முறைப்படி வெளியாகியிருந்தது. அந்த வகையில் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான வீரர்களின் பட்டியல் வெளியானதில் இருந்து பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் சுப்மன் கில் :

அதேபோன்று இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில் இருந்து துணை கேப்டனான சுப்மன் கில் நீக்கப்பட்டது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியது. ஏனெனில் எதிர்கால மூன்று வகையான இந்திய அணியின் கேப்டனாக பார்க்கப்படும் அவரை திடீரென பிசிசிஐ கழட்டி விட்டது அதிரடியான முடிவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தொடர்ந்து துணை கேப்டன் பதவியில் நீடிப்பார் என்றும் இந்த உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் சூரியகுமார் யாதவுக்கு அடுத்து டி20 அணியின் கேப்டனாகவும் மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் திடீரென சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படி டி20 உலக கோப்பை தொடரிலிருந்து தன்னை நீக்கியதால் சுப்மன் கில் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக தான் தயாராகி வந்த வேளையில் இந்திய அணியின் நிர்வாகம் எடுத்த திடீர் முடிவால் அவர் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் வெளியாகியுள்ள தகவலின் படி : ஏற்கனவே டி20 போட்டிகளின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அதே நிலையை டி20 உலக கோப்பை தொடரிலும் தொடரும் என்று நினைத்து முழு வீச்சில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக அவர் தயாராகி வந்த நிலையில் திடீரென எந்த ஒரு காரணத்தையும் அவரிடம் சொல்லாமல் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : எல்லாம் சரி தான்.. இந்த 2 பேரை ஏன் டி20 வேர்ல்டுகப் டீம்ல எடுக்கல – வாசிம் ஜாபர் கேள்வி

அதிலும் குறிப்பாக அவர் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவது குறித்து முறையாக எந்த தகவலும் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கடைசி சில மணி நேரங்களுக்கு முன்னதாக தான் கில்லுக்கு தகவல் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நிர்வாகத்தின் மீது சுப்மன் கில் கடும் அதிருப்தியில், ஏமாற்றத்திலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement