முதல் வெற்றியை பெற்ற பிறகு கேப்டன் சுப்மன் கில்லுக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம் – என்ன நடந்தது?

Gill
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்திருந்த வேளையில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

சுப்மன் கில்லுக்கு விதிக்கப்பட்ட அபராதம் :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. பின்னர் 211 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 209 ரன்கள் மட்டுமே குவிக்க இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியானது த்ரில் வெற்றியை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : நேற்றைய போட்டி நடைபெற்ற போது இரண்டாவதாக பந்துவீசிய குஜராத் அணி போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீசுவதற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டது.

அதன்காரணமாக அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி இந்த தவறை முதல் முறை செய்வதன் காரணமாக கேப்டன் கில்லுக்கு தற்போது 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தவறும் மேலும் நீடிக்கும் பட்சத்தில் அணி வீரர்கள் அனைவருக்குமே அபராதம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நான்காவது முறையாக 1 ரன்னில் அடைந்த தோல்வி.. பரிதாப சாதனையில் முதலிடம் பிடித்த – டெல்லி கேபிட்டல்ஸ் அணி

ஏற்கனவே இந்த தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இருமுறை இந்த அபராதத்தை சந்தித்துள்ளார். அதேபோன்று சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மாவும் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து கோபப்பட்டதால் அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருநித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement