இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டெஸ்ட்டிலும் விலகும் இந்திய வீரர் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்கள் கான்பெர்ரா மைதானத்தில் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரரான சுப்மன் கில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தார்.
இந்நிலையில் அவரது காயத்தின் தன்மையை தற்போது தீவிரமாக மருத்துவக்குழு கண்காணித்து வரும் வேளையில் இன்னும் பத்து முதல் 14 நாட்கள் வரை அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விளையாட வாய்ப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது.
கட்டைவிரல் எலும்பு முறிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அவரை அவசரப்பட்டு விளையாட வைத்தால் அது நிச்சயம் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அவரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுமாறு மருத்துவக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : செஞ்சுரியை விட டீம் தான் முக்கியம்.. விராட் கோலி எடுத்த முடிவு.. பொறுமை காத்த பும்ரா – வெளியான தகவல்
அதே போன்று ஒருவேளை காயம் இன்னும் பெரிதாகும் பட்சத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் அவர் தவற விட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும் அவருக்கான சரியான மாற்று வீரர்கள் அணியில் இருப்பதால் இந்த விடயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பலாம்.



