ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் நகரில் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நவம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
முடிவு எடுத்த விராட் கோலி, பொறுமை காத்த பும்ரா :
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 150 ரன்களை மட்டுமே குவித்து சரிவை சந்தித்து இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸ்ஸின் போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது அட்டகாசமான ஆட்டம் காரணமாக 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்து டிக்ளர் செய்திருந்தது. இப்படி இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ரன் குவிப்பில் இந்திய அணி ஈடுபட்டதால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் என்கிற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன் காரணமாக இந்திய அணி 295 ரன்கள் என்கிற பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 143 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சதம் விளாசியிருந்தார். இந்நிலையில் இப்படி விராட் கோலி செஞ்சுரி அடிக்கும் முன்னரே டிக்ளர் செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவு எடுத்தார் என்பது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 55 ரன்கள் அடித்த போதே இந்திய அணியின் ஓய்வறைக்கு மெசேஜ் ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில் தற்போதைய நிலையிலேயே ஆட்டத்தை டிக்ளர் செய்து கொள்ளலாமா? இந்த ரன்கள் நமக்கு போதுமா? என்பது போன்ற கருத்தினை பும்ராவிற்கு தூது அனுப்பியுள்ளார். ஆனால் பும்ராவோ நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள் இன்னும் 22 ஓவர்கள் பேட்டிங் செய்யலாம் என்று பதிலளித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் மூன்றாவது நாளின் கடைசி சில ஓவர்கள் நாம் பந்துவீச வேண்டும் என்றும் சில திட்டங்களை வைத்துத்துள்ளதாக தெளிவான தகவலை மீண்டும் செய்தியாக அனுப்பியுள்ளார், இதனை கேட்டுக்கொண்ட விராட் கோலியும் அடுத்ததாக சந்திக்கப்போகும் இந்த 20 ஓவர்களில் நாம் நம்முடைய ஷாட்டை விளையாட வேண்டும் என்று உறுதி செய்து சற்று கியரை மாற்றி சதம் வரை சென்றுள்ளார்.
இதையும் படிங்க : சூரியகுமார் கேட்ச்சை பொய்ன்னு சொன்னாங்க.. இப்போ நொறுக்குவோம்ன்னு இந்தியா காமிச்சுருக்கு.. ஆஸிக்கு கவாஸ்கர் பதிலடி
ஒருபுறம் விராட் கோலி டிக்ளேர் செய்ய முன்கூட்டியே முடிவு செய்தாலும் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மீது கண் வைத்த பும்ரா அவர் சதம் அடிக்கும் வரை காத்திருந்து டிக்ளேர் செய்துள்ளார். இப்படி ஒருபுறம் சதம் அடிக்க வேண்டாம் என்றும் இந்திய அணி தான் முக்கியம் என்றும் டிக்ளர் செய்ய விராத் கோலி முடிவெடுத்தாலும், விராட் கோலியின் பார்மும் முக்கியம் என்று பும்ரா காத்திருந்ததும் என சுவாரசியமான தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



