250-300 கோடி எதுக்கு தராங்க? விமர்சனத்திற்கு உள்ளான சுப்மன் கில்லின் செய்கை – அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது கடந்த ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 536 ரன்கள் தேவை என்கிற நிலையில் இங்கிலாந்து அணியானது விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது.

விமர்சனத்திற்கு உள்ளான சுப்மன் கில்லின் செயல் :

அதன்காரணமாக இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்த செயல் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. மேலும் அவரது இந்த நடவடிக்கைக்காக கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தண்டனை வழங்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் செய்த சர்ச்சையான செயல் யாதெனில் :

நேற்றைய போட்டியில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வந்த போது 83-வது ஓவரில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களத்தில் இருக்கையில் கேப்டன் சுப்மன் கில் டிக்ளர் செய்வதாக அறிவித்தார். அப்படி அவர் அறிவித்தது தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனெனில் ஓய்வறையில் இருந்து கைகாட்டிய அவர் இந்திய அணியின் ஜெர்சியை அணியாமல் கருப்பு நிற டி-ஷர்டுடன் இருந்தவாறு டிக்ளர் செய்வதை அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அந்த டி-ஷர்டில் நைக் நிறுவனத்தின் சிம்பிள் இருந்ததாலேயே தற்போது இந்த விடயம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் அடுத்த 2028 மார்ச் மாதம் வரை இந்திய ஆண்கள், பெண்கள் மற்றும் யூத் அணி ஆகிய அனைத்து அணிகளுக்குமே “அடிடாஸ்” என்கிற கம்பெனி தான் ஜெர்சி ஸ்பான்சராக இருக்கிறது. அப்படி ஸ்பான்சராக இருக்கும் அவர்கள் ஆண்டுதோறும் பெரிய தொகையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகின்றனர்.

அவர்களுடைய கம்பெனி சீருடையை தான் வீரர்கள் மைதானத்தில் அணிந்து விளையாடி வருகின்றனர். இவ்வேளையில் இதனை கவனித்த ரசிகர்கள் பலரும் : 250-300 கோடி ரூபாய் வரை ஸ்பான்சர் செய்து இந்திய அணிக்காக செலவு செய்து வரும் அடிடாஸ் கம்பெனியை தவிர்த்து நைக் கம்பெனியின் டீ-ஷர்டை அணிந்தவாறு எவ்வாறு சுப்மன் கில் டிக்ளரை அறிவிக்கலாம் என்று ரசிகர்கள் அவரது இந்த செயலுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க : உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டர்னா சும்மாவா.. ரவீந்திர ஜடேஜா செய்த தரமான சம்பவம் – விவரம் இதோ

மேலும் அது குறித்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர். இந்த விடயம் தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாகவும் மாறியுள்ளது. அதோடு இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement