உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டர்னா சும்மாவா.. ரவீந்திர ஜடேஜா செய்த தரமான சம்பவம் – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி நகர்ந்து வருவது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு தற்போது தீவிரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

ஆல்ரவுண்டராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா :

இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற 536 ரன்கள் தேவை என்கிற நிலை இருக்கிறது. அதேவேளையில் இந்திய அணி இந்த கடைசி நாளில் எஞ்சியுள்ள ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்து வருவதால் நிச்சயம் இங்கிலாந்து அணி இந்த மாபெரும் இலக்கை சேசிங் செய்வதை விட இந்திய அணி அவர்களை ஆல் அவுட்டாக்கி வெற்றி பெறும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடி வரும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் தன்னால் இதுவரை விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்றாலும் பேட்டிங்கில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்திய அணியின் வெற்றிக்காக உதவியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில்லுடன் இணைந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த அவர் ஆறாவது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவிக்க உதவியாக இருந்தார்.

- Advertisement -

அந்த முதல் இன்னிங்சில்137 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 89 ரன்களை குவித்திருந்தார். அதுமட்டும் இன்றி இரண்டாவது இன்னிங்சிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 118 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 69 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இதையும் படிங்க : உலக சாதனை படைச்சது தெரியாது.. கில் தான் இன்ஸ்பைரேஷன்.. அடுத்த டைம் 200 அடிப்பேன்.. சூர்யவன்சி பேட்டி

இப்படி பந்துவீச்சில் தன்னால் கைகொடுக்க முடியவில்லை என்றாலும் பேட்டிங்கில் இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து தான் ஏன் உலகின் நம்பர் 2 ஆல்ரவுண்டராக இருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார். போட்டியின் கடைசி நாளான இன்று மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு சில விக்கெட்டுகள் விழக்கூட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement