- Advertisement -
உலக கிரிக்கெட்

ஐ.சி.சி தரவரிசை விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில் அசத்தல் – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு பின்னர் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்த தரவரிசை பட்டியல் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்காக சமீபத்தில் அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம், டி20 கிரிக்கெட்டில் சதம் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

அதோடு தொடர்ச்சியாக தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பொன்னாக மாற்றி வரும் சுப்மன் கில் இந்திய அணியின் எதிர்கால நிரந்தர ஓப்பனர் என்கிற இடத்தையும் பிடித்து விட்டார். எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் முக்கிய வீரராக அவர் இருப்பார் என்று பார்க்கப்பட்ட வரும் வேளையில் தற்போது வெளியாகியுள்ள தரவரிசை பட்டியலில் அவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

- Advertisement -

அதேபோன்று இந்த தரவரிசை பட்டியலில் விராட் கோலி ஆறாவது இடத்திலும், ரோஹித் சர்மா எட்டாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் வேண்டர் டுசைன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : IPL 2023 : ஏற்கனவே 2 பேர் போன நிலையில் 3 ஆவது வீரராக பெங்களூரு அணியிலுருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

அதேபோன்று மற்றொரு பாகிஸ்தான் வீரரான இமாம் உல் ஹக் மூன்றாவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை பொருத்தவரை இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -