IPL 2023 : ஏற்கனவே 2 பேர் போன நிலையில் 3 ஆவது வீரராக பெங்களூரு அணியிலுருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

Topley
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல அணிகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறுவது தொடர்கதை ஆகியுள்ள நிலையில் பெங்களூர் அணிக்கு இந்த விடயம் பெரிய சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது.

Topley 2

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மினி ஏலத்தில் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான வில் ஜேக்ஸ் காயம் காரணமாக இடம்பெறாமல் முடியாமல் போனது.

அதேபோன்று இந்த ipl தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்த அந்த அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படித்தார் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்தே விலகியிருந்தார்.

Topley 1

இந்நிலையில் தற்போது பெங்களூரு அணியில் இருந்து மூன்றாவது வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி அதிகாரவபூர்வமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அவர் பெங்களூர் அணிக்காக முதல் போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து இனிவரும் போட்டிகளிலும் அவர் கட்டாயம் பெங்களூரு அணிக்காக இடம்பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசியாக நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது ஃபீல்டிங் செய்கையில் கேட்ச் பிடிக்க சென்று வலது தோள்பட்டையில் காயமடைந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : மிரட்டிய ஆர்சிபி, பதிலுக்கு தெறிக்கும் பேட்டிங் செய்து ஜோஸ் பட்லருக்கு நிகராக கொல்கத்தாவை காப்பாற்றிய லார்ட் தாகூர்

இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவர் நாடு திரும்பி உள்ளார் என்று பெங்களூரு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement