310/5 சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்தும் கேப்டன் கில்.. இங்கிலாந்தில் அரிதான சாதனை.. கோலியின் 2 சாதனை சமன்

Shubman Gill 25
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அந்த நிலையில் ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த கருண் நாயர் 31 ரன்னில் பெவிலியம் திரும்பினார். ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.

- Advertisement -

தூக்கி நிறுத்திய கில்:

அந்த ஜோடியில் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 13 பவுண்டரியுடன் 87 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதற்கடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் 25 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்து வந்த நித்திஸ் ரெட்டி 1 ரன்னில் போல்ட்டானார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய கில் அரை சதத்தை அடித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடி கை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதத்தை அடித்ததால் முதல் நாள் இந்தியா 310/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் 114*, ஜடேஜா 41* ரன்களுடன் உள்ளார்கள். முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியின் முதல் நாளில் சதத்தை அடித்த கில் இப்போட்டியின் முதல் நாளிலும் சதத்தை அடித்துள்ளார்.

- Advertisement -

அரிதான சாதனை:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் 2 வெவ்வேறு போட்டிகளில் முதல் நாளில் 2 சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற அரிதான சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவை சேர்ந்த 12 வீரர்கள் சாதாரண பேட்ஸ்மேன்களாக மட்டுமே அப்படி 2 சதங்கள் அடித்துள்ளார்கள். இத்துடன் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோருக்கு பின் கேப்டனாக தனது முதல் 2 போட்டியிலும் சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: பும்ரா ஓகே.. அவரையும் எடுக்கலன்னா எப்படி 20 விக்கெட்ஸ் எடுப்பீங்க? சுதர்சனை முடிச்சுறாதீங்க.. பின்ச், பத்ரிநாத் அதிருப்தி

2024 தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற 5வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதத்தை அடித்த கில் தற்போது அடுத்தடுத்த போட்டிகளில் சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக முகமது அசாருதீன் (1984 – 85), திலிப் வெங்சர்கார் (1985 – 86), ராகுல் டிராவிட் (2002 மற்றும் 2008 – 2011) ஆகியோருக்கு பின் இங்கிலாந்துக்கு எதிராக 3 தொடர்ச்சியான போட்டிகளில் 3 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் கில் சமன் செய்துள்ளார்.

Advertisement