பும்ரா ஓகே.. அவரையும் எடுக்கலன்னா எப்படி 20 விக்கெட்ஸ் எடுப்பீங்க? சுதர்சனை முடிச்சுறாதீங்க.. பின்ச், பத்ரிநாத் அதிருப்தி

Aaron Finch
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அந்த சூழ்நிலையில் பர்மிங்கம் நகரில் ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுத்து 3வது போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களையும் பல முன்னாள் வீரர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக முதல் போட்டி முடிந்து 7 நாட்கள் இடைவெளி இருந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்தார். எனவே தொடரை சமன் செய்ய நிச்சயம் வென்றாக வேண்டிய இப்போட்டியில் பும்ரா விளையாடியிருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

- Advertisement -

20 விக்கெட்ஸ் எடுக்க:

இது போக பர்மிங்கம் மைதானம் கடைசிக்கட்ட நாட்களில் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே குல்தீப் யாதவ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலைக் கொடுப்பார் என்பதால் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் பேட்டிங் வரிசையில் ஆழத்தை அதிகரிப்பதற்காக அவரை தேர்ந்தெடுக்காத இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்துள்ளது.

கடந்த போட்டியில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்காத குறையை சரி செய்வதற்காக சுந்தர் மற்றும் நித்திஸ் ரெட்டி விளையாடுவதாக கேப்டன் கில் தெரிவித்தார். அவர்களுக்காக கடந்த போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை போல விக்கெட் எடுக்கும் திறனை கொண்ட குல்தீப் யாதவை எடுக்காவிட்டால் எப்படி தான் இந்தியா 20 விக்கெட்டுகள் எடுக்கப் போகிறது? என்று ஆரோன் பின்ச் கவலைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சுதர்சன் நீக்கம்:

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனாக அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பும்ரா ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் உலகின் சிறந்த பவுலரை விளையாட வைக்க வேண்டும். நீங்கள் 20 விக்கெட்டுகளை எடுக்கும் கவலையைக் கொண்டிருந்தால் குறைந்தபட்சம் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: தேவையின்றி வம்பிழுத்த ஸ்டோக்ஸ்.. கோலி போல பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால்.. கடைசியால் கொண்டாட்டம்

“ஆம் அவர் ரன்களை கொடுப்பார். ஆனால் அவர் 2வது சிறந்த அட்டாக் செய்யும் ஆப்சன் ஆவார்” என்று கூறியுள்ளார். அதே போல சாய் சுதர்சனின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் அறிமுகப் போட்டியுடன் நீக்கப்பட்டுள்ளது பற்றி சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சித்தது பின்வருமாறு. “கடந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் 30 ரன்கள் அடித்த சுதர்சன் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்தார். உயர்ந்த தன்னம்பிக்கையைக் கொண்ட இளைஞரை இப்படி நீக்குவது சரியாகத் தோன்றவில்லை” என்று கூறினார்.

Advertisement