தேவையின்றி வம்பிழுத்த ஸ்டோக்ஸ்.. கோலி போல பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால்.. கடைசியில் கொண்டாட்டம்

Stokes vs Jaiswal
- Advertisement -

இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றது. அடுத்ததாக நடைபெறும் இரண்டாவது போட்டியில் ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல். ராகுல் ஆரம்பத்திலேயே 2 ரன்னில் அவுட்ராகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் ஜெய்ஸ்வால் நிதானம் கலந்து அதிரடியாக வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். அப்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு ஓவரை வீசினார். அவருடைய ஒரு பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார். அப்போது தம்முடைய அருகே வந்த அவரிடம் பென் ஸ்டோக்ஸ் ஏதோ சொன்னதாக தெரிகிறது.

- Advertisement -

வம்பிழுத்த ஸ்டோக்ஸ்:

ஆடுகளத்தின் நடுப்பகுதியில் நின்று பென் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகவில்லை. மறுபுறம் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே ஓடி வந்த ஜெய்ஸ்வால் வெள்ளைக்கோட்டை தொட்டார். அப்போதும் பென் ஸ்டோக்ஸ் லேசாக முணுமுணுத்துக் கொண்டே அடுத்த பந்தை வீசுவதற்காக சென்றார். அதைப் பார்த்த ஜெய்ஸ்வால் வெள்ளைக்கோட்டில் நின்று கொண்டு.

“நீங்கள் அந்த வார்த்தைகளை என்னிடமிருந்து கேட்க விரும்ப மாட்டீர்கள், கமான்” என்று கூறினார். அதாவது 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸை அப்போதைய கேப்டன் விராட் கோலி பிரபல இந்திக் கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டியது வைரலானது. அந்த கெட்ட வார்த்தை பென் ஸ்டோக்ஸ் பெயரை ஒத்ததாக இருக்கும் என்பதை இந்தி தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

- Advertisement -

பதிலடியும் கொண்டாட்டமும்:

அதே போன்ற வார்த்தைகளை என்னிடமிருந்து கேட்க விரும்ப மாட்டீர்கள் என்று பென் ஸ்டோக்ஸிடம் மறைமுகமாக ஜெய்ஸ்வால் சொன்னார். அதைக் கேட்ட ஸ்டோக்ஸ் “எதைக் கேட்க விரும்ப மாட்டேன்?” என்று அவருக்கு பதிலளித்தார். அடுத்தப் பந்தை கருண் நாயர் எதிர்கொண்டார். அந்த பந்தை முடித்த பின்பும் ஸ்டோக்ஸ் ஏதோ முணுமுணுத்தார். அதற்கு “என்ன சொன்னீர்கள்” என்று பதிலடிக் கொடுத்த ஜெய்ஸ்வால் தொடர்ந்து விளையாடி அரை சதத்தை அடித்தார்.

இதையும் படிங்க: வெறும் 5 பேர் தானா? கில், கம்பீர் எடுத்திருக்கும் சூதாட்ட முடிவால் இந்தியா ஜெய்க்கிறது கஷ்டம்.. டாம் மூடி

மறுபுறம் கருண் நாயர் 31 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் இந்த பக்கம் நன்கு செட்டிலான ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கிய போது 87 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் அந்த விக்கெட்டை வெறித்தனமாக கூச்சலிட்டு கொண்டாடினார். இந்தப் பதிவிடும் போது தேனீர் இடைவெளியில் இந்தியா 182/3 ரன்களை எடுத்துள்ளது.

Advertisement