
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியாவுக்கு கே.எல். ராகுல் 2, கருண் நாயர் 31 ரன்னில் அவுட்டானார்கள்.
இருப்பினும் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 87 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் நிதானமாக பேட்டிங் செய்தார். எதிர்ப்புறம் வந்த ரிஷப் பண்ட் 25, நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர் ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கில் முதல் நாளிலேயே சதத்தை அடித்து அசத்தினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா அபாரமாக விளையாடி 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து அசத்திய அவர் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபுறம் அற்புதமாக விளையாடிய கில் கேப்டனாக தனது இரண்டாவது போட்டியிலேயே இரட்டை சதத்தை அடித்து 222* ரன்களை குவித்து இந்தியாவை 500 ரன்கள் தாண்ட வைத்தார்.
இதன் வாயிலாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் இரட்டை சதத்தை அடித்த முதல் ஆசிய மற்றும் இந்திய கேப்டன் என்ற 2 சரித்திர சாதனையை சுப்மன் கில் படைத்தார். இதற்கு முன் 2011 இங்கிலாந்து லார்ட்ஸ் போட்டியில் இலங்கை கேப்டன் திலகரத்தினே தில்சன் 193 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இந்தியளவில் 1990 நியூஸிலாந்தின் ஆக்லாந்து போட்டியில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 192 ரன்கள் அடித்ததையும் முந்தைய சாதனை.
இது போக இங்கிலாந்து மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கர் சாதனையை உடைத்த கில் புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1979 ஓவல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கவாஸ்கர் 221 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது மட்டுமின்றி இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: முதல் ஆசிய கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் – விவரம் இதோ
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இளம் வயதில் சதத்தை அடித்த இந்திய கேப்டன் (25 வருடம் 298 நாட்கள்) என்ற சச்சின் சாதனையையும் கில் உடைத்துள்ளார். இதற்கு முன் 1999 அகமதாபாத் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சச்சின் 26 வருடம் 198 நாட்களில் இரட்டை சதம் அடித்ததை முந்தைய சாதனை. அதே பட்டியலில் முதலிடத்தில் மாக் பட்டோடி 1964ஆம் ஆண்டு 23 வருடம் 39 நாட்களில் இங்கிலாந்துக்கு எதிராக டெல்லியில் இளம் வயதில் இதை இரட்டை சதத்தை அடித்த இந்திய கேப்டனாக முதலிடத்தில் உள்ளார்.