யாரும் தொட்டு பாக்காத சச்சினின் சாதனைக்கு குறிவைத்துள்ள சுப்மன் கில் – முறியடிக்கவும் வாய்ப்பு இருக்கு

Sachin-and-Shubman
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை எவராலும் தொட முடியாத நிலையில் இன்றளவும் உள்ளன. அதேவேளையில் சில சாதனைகளை விராட் கோலி தகர்த்துள்ளார். ஆனால் அவரை தவிர்த்து பெரியதாக எந்த ஒரு வீரரும் சச்சினின் சாதனையை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையே இன்றளவும் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில்லுக்கு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான்.

- Advertisement -

அந்த வகையில் ஒரே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் ரன்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு மட்டும் அவர் ஒருநாள் போட்டிகளில் 1894 ரன்களை அடித்துள்ளார். இதுவே ஒரே ஆண்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஒருநாள் ரன்களாக இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.

அந்த 1998-ஆம் ஆண்டு மட்டும் சச்சின் விளையாடிய 34 போட்டிகளில் 9 சதம் மற்றும் 7 அரைசதங்கள் அடித்து அடித்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு 2023-ஆம் ஆண்டு இதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 70 ரன்கள் சராசரியுடன் 1126 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களை அவர் விளாசியுள்ளார். மேலும் இன்னும் 768 ரன்கள் அடித்தால் சச்சின் அந்த சாதனையை தகர்க்க சுப்மன் கில்லுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : 3 கோல்டன் டக் அவுட்டான அப்றமும் நீங்க ஏன் இதை செய்றீங்க.. ஃப்ரீயா விடுங்க – சூரியகுமாருக்கு சேவாக் முக்கிய ஆலோசனை

ஏனெனில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையில் 9 போட்டிகளும் அதன் பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்த ஆண்டு முடிவதற்குள் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட இருப்பதால் மொத்தம் 14 போட்டிகள் சுப்மன் கில்-க்கு காத்திருக்கின்றன. எனவே நிச்சயம் இந்த 14 போட்டியில் அவர் அந்த சாதனையை முறியடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement