அவர் நிரந்தர இடத்தை பிடிச்சுட்டாரு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஜெயிக்க அதை செய்ங்க – இந்திய அணிக்கு கங்குலி அட்வைஸ்

Ganguly
- Advertisement -

2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்க போகும் இந்த ஃபைனலில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. முன்னதாக வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இந்த உலக கோப்பையின் முதல் தொடரில் விராட் கோலி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஃபைனலில் நியூசிலாந்திடம் வழக்கம் போல சொதப்பலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தோற்றது.

WTC

- Advertisement -

எனவே இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்வதற்கு இந்தியா போராட காத்திருக்கும் நிலையில் அதற்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியை தேர்வு வேண்டியது கட்டாயமாகிறது. குறிப்பாக இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் ஸ்விங் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைப்பது வெற்றிக்கு அவசியமாகும். அந்த இடத்தில் பார்மின்றி தவிப்பதால் கழற்றி விடப்பட்டுள்ள கேஎல் ராகுலுக்கு பதில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிரந்தர இடம்:
சொல்லப்போனால் சௌதம்டன் நகரில் நடைபெற்ற 2021 ஃபைனலிலேயே ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய அவர் 28, 8 என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் இம்முறை முன்பை விட அனுபவத்தை பெற்றுள்ள அவர் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு சமீபத்திய நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இரட்டை சதமும், சதமும் விளாசி நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

ashwin 1

குறிப்பாக ஒரே காலண்டர் வருடத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக சாதனை படைத்துள்ள அவர் சச்சின், விராட் கோலி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அதனால் கேஎல் ராகுல் வேண்டுமானால் விக்கெட் கீப்பராக விளையாடட்டும் ஆனால் இவர் தொடக்க வீரராக விளையாட வேண்டுமென தினேஷ் கார்த்திக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் தொடர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிரந்தரமான இடத்தை பிடித்துள்ள சுப்மன் கில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சந்தேகமின்றி விளையாட வேண்டுமென்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தால் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் அஷ்வின், ஜடேஜா, அக்சர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருந்தாலும் அனைவராலும் ஃபைனலில் விளையாட முடியாது என்று கூறியுள்ளார்.

Ganguly

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமீப காலங்களில் ஆஸ்திரேலியா மண்ணில் வென்ற இந்தியா இங்கிலாந்து மண்ணிலும் வென்றுள்ளதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஏன் அவர்களால் மீண்டும் வெல்ல முடியாது. என்னைக் கேட்டால் அந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து 350 – 400 ரன்களை எடுத்தால் நீங்கள் வெற்றி பெறும் இடத்தை அடையலாம். கண்டிப்பாக சுப்மன் கில் அதில் தன்னுடைய இடத்தை பிடிப்பதை நான் பார்ப்பேன்”

இதையும் படிங்க:நம்மள விட ஒருத்தன் பெஸ்ட்டா இருக்க கூடாதுன்னு ஈகோ பாக்காதீங்க, ஹர்பஜனுக்கு அஷ்வின் பதிலடி கொடுத்தாரா? பரபரக்கும் வீடியோ

“அவர் கடந்த 6 – 7 மாதங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும்? அவர் தற்போது நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அக்சர் பட்டேலையும் நீங்கள் பாராட்ட வேண்டும். குறிப்பாக லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அந்த வகையில் ஜடேஜா, அஸ்வின், அக்சர் ஆகியோர் இருப்பது இந்தியாவின் பலமாகும். இருப்பினும் வெளிநாடுகளில் அந்த மூவரையும் நீங்கள் சேர்ந்தால் போல் விளையாட முடியாது என்பதை நான் அறிவேன். இருப்பினும் அவர்களிடம் அற்புதமான திறமை உள்ளது” என்று கூறினார்.

Advertisement