விராட் கோலியின் 7 ஆண்டுகால சாதனையை முறியடித்த கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ

Kohli and Gill
- Advertisement -

எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் குவித்திருந்த வேளையில் இந்திய அணியானது இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் :

நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் போது சதம் அடித்து ஆட்டமிழக்காமல் சதம் அடித்து களத்தில் இருந்த சுப்மன் கில் இன்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உணவு இடைவேளை கடந்த பின்னர் தற்போது 170 ரன்களை கடந்து வலுவான நிலையில் சுப்மன் கில் உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் அடித்த 150 ரன்கள் மூலம் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை அவர் 7 ஆண்டுகள் கழித்து எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் :

போட்டி நடைபெறும் இந்த எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு விராட் கோலி 149 ரன்களை குவித்திருந்தார். அதுவே இந்த மைதானத்தில் இந்திய கேப்டன் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் 150 ரன்கள் அடித்ததன் மூலம் விராட் கோலியின் அந்த 7 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி போட்டி நடைபெற்று வரும் இந்த எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் ஐந்தாவது இந்திய வீரராக சுப்மன் கில் சதத்தை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த மைதானத்தில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்திருந்த வேளையில் ஐந்தாவது இந்திய வீரராக அவர் இங்கு சதத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : போனமுறை ரிஷப் பண்ட்டுடன் சேர்ந்தது மாதிரி.. இம்முறை கில்லுடன் இணைந்து சாதனை நிகழ்த்திய – ரவீந்திர ஜடேஜா

அதுமட்டுமின்றி இங்கிலாந்து மண்ணில் 150+ ரன்களை அடித்த இரண்டாவது இந்திய கேப்டனாக முகமது அசாருதீனுடன் இணைந்துள்ளார். தற்போதைய நிலையில் இந்திய அணி 450 ரன்களை நெருங்கியுள்ள வேளையில் வலுவான முன்னிலையுடன் இந்த போட்டியில் பயணித்து வருகிறது.

Advertisement