754 ரன்ஸ்.. சொன்னதை செய்த கில்.. கிரஹாம் கூச்சை முந்தி 2வது உலக சாதனை.. சச்சின், கோலி சாதனை சமன்

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி சமன் செய்து ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை பகிர்ந்து கொண்டது. குறிப்பாக கடைசி போட்டியின் கடைசி நாளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இங்கிலாந்து எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது.

ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்திய அணி 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்தது. அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ரன்னுக்கும் குறைவாக வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சொன்னதை செய்த கில்:

அதே போல 754 ரன்கள் குவித்த கேப்டன் சுப்மன் கில் தொடர்நாயகன் விருதை வென்றார். இதற்கு முன் வெளிநாட்டு மண்ணில் கில் பெரிய ரன்களை அடிக்கவில்லை. அதனால் இத்தொடரின் ஆரம்பத்தில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்ற வரை கேப்டனாக நியமிக்கலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.

அதன் காரணமாக “இந்தத் தொடரில் தாம் அதிக ரன்களை குவித்து சிறந்த பேட்ஸ்மேனாக வர விரும்புகிறேன்” என்று தொடர் துவங்குவதற்கு முன்பாக செய்தியாளர்கள் கில் தெரிவித்தார். தற்போது சொன்னது போலவே இத்தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள கில் தொடர்நாயகன் விருதையும் வென்று சொன்னதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

2வது உலக சாதனை:

இதன் வாயிலாக கடந்த 30 வருடங்களில் சேனா நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் என்ற சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி சாதனையை கில் சமன் செய்துள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் (2018ஆம் ஆண்டில்) சாதனையையும் கில் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக 1113 பந்துகள் 185.3 ஓவர்ஸ் போட்டு உடம்பு வலிக்கலயா? சிராஜ் சொன்ன நெஞ்சை தொடும் பதில்

மேலும் 25 வயதுக்குள் சேனா நாடுகளில் 2 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். இவை அனைத்தையும் விட ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்களின் பட்டியலில் கில் 2வது பிடித்து உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சர் டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா): 810, இங்கிலாந்துக்கு எதிராக, 1936 – 37
2. சுப்மன் கில் (இந்தியா): 754, இங்கிலாந்துக்கு எதிராக, 2025*
3. கிரகாம் கூச்: 752, இந்தியாவுக்கு எதிராக, 1990

Advertisement