இந்தியாவுக்காக 1113 பந்துகள் 185.3 ஓவர்ஸ் போட்டு உடம்பு வலிக்கலயா? சிராஜ் சொன்ன நெஞ்சை தொடும் பதில்

Mohammed Siraj 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அந்த வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். சொல்லப்போனால் இத்தொடரில் இரு அணிகளை சேர்ந்த எந்த வேகப்பந்து வீச்சாளராலும் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் முகமது சிராஜ் மட்டும் இந்தியாவுக்காக 5 போட்டிகளில் முழுமையாக விளையாடி 23 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

நாட்டுக்காக 1113 பந்துகள்:

இந்த 5 போட்டிகளிலும் அவர் 185.3 ஓவர்கள் அதாவது 1113 பந்துகளை போட்டு இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டுள்ளார். அதற்காகவே பலரும் முஹமது சிராஜை ஸ்பெஷலாக பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் இவ்வளவு பந்துகளைப் போட்ட உங்களுடைய உடல் வலிக்கவில்லையா? என்று சிராஜிடம் தொடரின் முடிவில் செய்தியாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு ஒவ்வொரு பந்தையும் தமக்காக அல்லாமல் இந்திய நாட்டுக்காக வீசுவதால் தமக்கு உடல் வலி தெரியவில்லை என்று சிராஜ் கூறினார். இது பற்றி இந்திய ரசிகர்களின் நெஞ்சை தொடும் வகையில் சிராஜ் கொடுத்த பதில் பின்வருமாறு. “உண்மையில் என்னுடைய உடல் தற்சமயத்தில் நன்றாக இருக்கிறது. இந்தத் தொடரில் கிட்டத்தட்ட 187 ஓவரகள் போட்டுள்ளேன்”

- Advertisement -

நெஞ்சை தொட்ட சிராஜ்:

“ஆனால் உங்களுடைய நாட்டுக்காக விளையாடும் போது நீங்கள் உங்களது அனைத்தையும் கொடுப்பீர்கள். அணிக்காக விளையாடும் போது நீங்கள் 6 – 9 ஓவர்கள் போட்டால் போதும் என்று நினைக்க முடியாது. பொதுவாகவே ஒவ்வொரு பந்தையும் எனக்காக வீசவில்லை, என்னுடைய நாட்டுக்காக வீசுகிறேன் என்று நான் நம்புகிறேன். நாட்டுக்காக விளையாடும் போது நீங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும். மற்றவை உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்காது”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் பற்றி சொன்னதுக்கு.. ஓக்ஸ் ரூபத்தில் கர்மா பென் ஸ்டோக்ஸை பழி வாங்கிடுச்சு.. அஸ்வின் சாடல்

“கடந்த ஆஸ்திரேலிய தொடரில் நான் 20 விக்கெட்டுகள் எடுத்தேன். பும்ரா பாய் விளையாடும் போது அவருடன் சேர்ந்து நான் பார்ட்னர்ஷிப் அமைத்து எதிர்புறம் ரன்களை வழங்காமல் இருக்க முயற்சித்தேன். இவை அனைத்தும் எதிரணி மீது அழுத்தத்தை உருவாக்குவதைப் பற்றியதாகும். ஆனால் எந்த சமயத்திலும் என்னால் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். எப்போதும் எனது 100 சதவீதத்தைக் கொடுக்க விரும்புகிறேன். என் முன்னேற்றத்தில் பொருட்களை எடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement