கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி குஜராத்தை காப்பாற்றிய கில்.. விராட் கோலியை முந்தி புதிய சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பத்தாம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 68* (38), ரியன் பராக் 76 (48) ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதை சேசிங் செய்த குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 72 (44) ராகுல் திவாட்டியா 22 (11) ரசித் கான் 24* (11) ரன்கள் அடித்து கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக சஹால் 2, குல்தீப் சென் 3 விக்கெட்டுகள் எடுத்தும் முதல் தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

கேப்டன் இன்னிங்ஸ்:
முன்னதாக இந்தப் போட்டியில் 198 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ஒருபுறம் சாய் சுதர்சன் 35, மேத்யூ வேட் 4, அபினவ் மனோகர் 1, விஜய் சங்கர் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். ஆனாலும் எதிர்ப்புறம் கேப்டனுக்கு அடையாளமாக விளையாடிய இளம் வீரர் சுப்மன் கில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் பேட்டிங் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அந்த வகையில் 16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடிய அவர் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (43) ரன்கள் அடித்து கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம். மேலும் இப்போட்டியில் அடித்த 72 ரன்களையும் சேர்த்து சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் 94 இன்னிங்ஸில் 3 சதங்கள் உட்பட 3045* ரன்களை எடுத்துள்ளார்.

- Advertisement -

அதை 24 வருடம் 215 நாட்கள் வயதில் எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 26 வருடம் 186 நாட்களில் 3000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஐபிஎல் தொடரில் 2வது வேகமான 3000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: கடைசில இப்படி தோத்தது உண்மையிலே ரொம்ப கஷ்டமா இருக்கு.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சாம்சன் வருத்தம்

லக்னோ அணிக்காக விளையாடும் நட்சத்திர கே.எல் ராகுல் 80 இன்னிங்ஸில் வேகமாக 3000 ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். தற்போது 94 இன்னிங்ஸில் 3000 ரன்கள் அடித்துள்ள கில் அந்தப் பட்டியலில் 2வது வீரராக இடம் பிடித்துள்ளார். மொத்தத்தில் இந்த வருடம் குஜராத்தின் புதிய கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement