- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் ஆசிய கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் – விவரம் இதோ

எட்ஜ்பேஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது 500 ரன்கள் கடந்து வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

முதல் ஆசிய கேப்டனாக சரித்திர சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் :

நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் போது சதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்றைய போட்டியில் அவர் அடித்த இரட்டை சதம் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை சுப்மன் கில் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்த முதல் கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் அவர் இரட்டை சதத்தை பதிவுசெய்து சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான திலகரத்னே தில்ஷான் கடந்த 2011-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் 193 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இந்நிலையில் அதனை தகர்த்த சுப்மன் கில் முதல் ஆசிய கேப்டனாக சேனா நாடுகளில் இரட்டை சதத்தை பதிவுசெய்த முதல் கேப்டனாக சாதனை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி கேப்டனாக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களில் விராட் கோலி, பட்டுடி, கவாஸ்கர், தோனி, சச்சின் ஆகியோருடன் தற்போது சுப்மன் கில்லும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

- Advertisement -

அதோடு தனது 25 வது வயது 298 நாட்களில் முதல் இரட்டை சதத்தை கேப்டனாக அவர் பதிவு செய்து இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். அதுமட்டும் இன்றி முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கருக்கு அடுத்து கேப்டனாக பொறுப்பேற்ற மூன்றாவது இன்னிங்ஸ்லயே இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி அவருடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலியின் 7 ஆண்டுகால சாதனையை முறியடித்த கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது செஷனில் இதுவரை 225 ரன்கள் குவித்துள்ளதால் அவர் எளிதாக 250 ரன்களை எட்டவும் வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுன்றி இந்த இன்னிங்சில் அவர் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் மேலும் பல சாதனைகளையும் அவர் நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -