போட்டியை நிறுத்துங்க விளையாட முடியாது.. சிரித்த அம்பயரை முறைத்து மீண்டும் வாதிட்ட கில்.. நடந்தது என்ன?

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி 56வது மும்பையில் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 35, சூரியகுமார் யாதவ் 53, கோர்பின் போஸ்க் 27 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய குஜராத்துக்கு கேப்டன் கில் 43, பட்லர் 30, ரூதர்போர்ட் 28 ரன்கள் எடுத்தனர்.

அதனால் 18 ஓவரில் 132/6 ரன்கள் எடுத்த குஜராத் வெற்றியை நெருங்கிய போது மழை வந்தது. இறுதியில் 19 ஓவராக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹர் வீசிய அந்த ஓவரில் ராகுல் திவாட்டியா 11*, ஜெரால்டு கோட்சி 12 (அவுட்), அர்சத் கான் 1* ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

- Advertisement -

கோபக்கார கில்:

குறிப்பாக கடைசிப் பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது ஹர்திக் பாண்டியா ரன் அவுட்டை தவற விட்டதைப் பயன்படுத்தி அர்சத் கான் சிங்கிள் எடுத்து குஜராத்தை வெற்றி பெற வைத்தார். அதனால் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்ற மும்பையின் வெற்றி நடையை குஜராத் நிறுத்தியது. மேலும் தங்களது 8வது வெற்றியை பெற்ற குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது.

முன்னதாக ஹைதராபாத்துக்கு எதிரான கடந்தப் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் தமக்கு ரன் அவுட் வழங்கியதற்காக 4வது நடுவருடன் குஜராத் கேப்டன் சுப்மன் கில் சண்டை போட்டார். அதே போல அபிஷேக் சர்மாவுக்கு எதிராக டிஆர்எஸ் ஒளிபரப்பில் பந்து எங்கே இம்பேக்ட் ஆனது என்பதை காட்டாததால் களத்தில் இருந்த நடுவர்களுடன் அவர் சண்டை போட்டது வைரலானது.

- Advertisement -

மீண்டும் வாதம்:

அந்த சூழ்நிலையில் இந்தப் போட்டியில் ரசித் கான் வீசிய 2வது பந்தை வில் ஜேக்ஸ் எதிர்கொண்டு தவற விட்டார். அதை களத்தில் இருந்து நடுவர் அவுட் கொடுக்காததை தொடர்ந்து கில் ரிவியூ எடுத்தார். அப்போது ஸ்டம்ப் மீது பந்து படாததால் 3வது நடுவரும் நாட் அவுட் வழங்கினார். அதைப் பார்த்து களத்தில் இருந்த நடுவர் புன்னகைத்தார். அவரைப் பார்த்து சுப்மன் கில் முறைத்தார்.

இதையும் படிங்க: மழைக்கு அப்புறம் விளையாட ரொம்பவே கஷ்டமா இருந்துச்சி.. மும்பையை வீழ்த்த இதுவே காரணம் – சுப்மன் கில் பேட்டி

அதை விட குஜராத் பேட்டிங் செய்கையில் 2வது ஓவரில் மழை வருவதற்காக வேகமான புழுதிக் காற்று அடித்தது. அப்போது நடுவர்கள் போட்டியை நிறுத்தவில்லை. இருப்பினும் பும்ரா வீசிய 3வது ஓவரில் வேகமாக காற்று அடித்தது. எனவே தம்மால் பந்தை சரியாக பார்க்க முடியாமல் விளையாட முடியாது என்பதால் போட்டியை நிறுத்துங்கள் என்று நடுவரிடம் சுப்மன் கில் வாதிட்டார். ஆனால் அப்போதும் நடுவர் அதற்கு சம்மதிக்காததால் தொடர்ந்து போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement