ரோஹித் சர்மாவை தொடர்ந்து சுப்மன் கில்லும் கம்பீரின் பேச்சை கேட்டு எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ

Gill
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த தொடரில் சொதப்பினார். இதன் காரணமாக அவரை இந்திய அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் யாருக்காவது வாய்ப்பினை கொடுங்கள் என்ற பேச்சும் எழ ஆரம்பித்து விட்டது.

ரோஹித்தை தொடர்ந்து சுப்மன் கில் எடுத்துள்ள முடிவு :

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடரின் 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய சுப்மன் கில் முறையே 31, 28, 1, 20, 13 என அந்த தொடர் முழுவதுமே 93 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். இந்த தொடரின் முதல் போட்டியை கட்டை விரல் காயம் காரணமாக தவறவிட்ட அவர் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது அணிக்கு தேவை இல்லை என்றும் நீக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

அந்த தொடர் முழுவதுமே 100 ரன்களை கூட அடிக்காத அவரது பேட்டிங் ஃபார்ம் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் மீதும் நிர்வாகம் கறார் காட்ட துவங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக இந்த ஆஸ்திரேலிய தொடர் முடிந்த கையோடு பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கூறுகையில் :

இனி எந்த முன்னணி வீரராக இருந்தாலும் சரி முழு உடற்தகுதியுடன் இருக்கும் வேளையில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று கருத்தினை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் முடிந்த கையோடு நாடு திரும்பியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா :

- Advertisement -

மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்து மூன்று நாட்கள் பயிற்சியில் ஈடுபட போவதாகவும், அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடப் போவதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் ரோஹித்தின் வழியை தற்போது பின்பற்றியுள்ள சுப்மன் கில் கம்பீரின் பேச்சை கேட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பஞ்சாப் அணியுடன் இணைந்து ரஞ்சி போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : கம்பீர், அகார்கர் மீது ரோஹித் சர்மாவிற்கு எவ்வித விரோதமும் இல்லை.. முற்றுப்புள்ளி வைத்த – ராஜீவ் சுக்லா

அந்த வகையில் எதிர்வரும் ரஞ்சி சீசனில் மீண்டும் பஞ்சாப் பணியுடன் இணைந்து ரஞ்சி போட்டியில் விளையாட சுப்மன் கில் முடிவு செய்துள்ளாராம். இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சுப்மன் கில் 35 ரன்கள் சராசரியுடன் 5 சதம் மற்றும் 7 அரைசதம் என 1893 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement