இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இறுதிப்போட்டி வரை எந்த ஒரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி தழுவி கோப்பையை தவறவிட்டது. இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியாக வேண்டிய குறிக்கோளுடன் தற்போது தங்களது முழு உழைப்பையும் வெளிப்படுத்தி வருகிறது.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பெருமையா இருக்கும் :
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடங்கும் போது மிடில் ஆர்டரில் விராட் கோலி, கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த கூட்டணி எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அசத்தலாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
ஆனால் இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் :
எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும்? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கடைசியாக நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடரில் நானும் கே.எல் ராகுலும் மிடில் ஆர்டரில் முக்கியமான ரோலில் விளையாடினோம்.
அந்த தொடரில் நாங்கள் இருவரும் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தோம். இறுதி போட்டியில் மட்டும் நாங்கள் விரும்பிய வழியில் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது வருத்தம். எனவே இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்த காத்திருக்கிறோம்.
இதையும் படிங்க : கண்டிப்பா இந்த வருஷம் எங்க கூட்டணி இதை செய்து காட்டும்.. ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து – பாண்டிங் கருத்து
ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்பட்டால் உண்மையிலேயே அது எனக்கு பெருமைக்குரிய தருணமாக இருக்கும். அதோடு இம்முறை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற என்னால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



