இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை வெற்றிகரமாக வழிநடத்தை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்ததால் இந்த பதவி அவருக்கு கிடைத்துள்ளது.
முதன்முறையாக இதை செய்து காட்டுவோம் :
மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருடன் இணைந்து மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் பணியாற்ற உள்ளது அந்த அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும், பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும் இருந்த போது அந்த அணி இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றது. அதன் காரணமாக இந்த தொடரிலும் அவர்களது கூட்டணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பாராட்டிப் பேசியுள்ள ரிக்கி பாண்டிங் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளை நுட்பமாக கணித்து விளையாடக்கூடியவர். கடந்த ஆண்டு கேப்டனாக தனது திறனை மிகச் சிறப்பாக அவர் வெளிக்காட்டி இருக்கிறார்.
எனவே மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே அவருடன் ஐபிஎல் தொடரில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த வகையில் மீண்டும் அவருடன் பணியாற்றுவதை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தற்போதைய பஞ்சாப் அணியில் தலைமை பண்பு நிறைந்த வீரராக இருக்கும் அவரை கேப்டனாக தேர்வு செய்தது எனக்கு மகிழ்ச்சி.
இதையும் படிங்க : என் மீது அந்த நம்பிக்கை வச்சதுக்கு நன்றி.. பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
நிச்சயம் இந்த முறையும் எங்களுடைய கூட்டணி மிகவும் வெற்றிகரமான கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன். மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை பெரிய தொகைக்கு எடுத்து மட்டுமில்லாமல் கேப்டனாகவும் மாற்றியதில் மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் இணைந்து முதல் கோப்பையை பஞ்சாப் அணிக்கு பெற்று தருவோம் என்று பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.