ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி. சி.பி.எல் தொடரில் ட்ரின்பாகோ. அடுத்து ஷாருக்கான் வாங்கும் அணி – விவரம் இதோ

Sharukh-khan
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை அதாவது 2020 ஆம் ஆண்டு வரை 13 ஐபிஎல் சீசன்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் மையமாக வைத்து இதுவரை 10 கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் இடையே போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இது போன்ற சிறப்பு டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

sharukh 1

- Advertisement -

அந்த அணிகளை உலகில் உள்ள பல்வேறு முக்கிய பிரபலங்கள் வாங்கி அதன் உரிமையாளர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஷாருக் கான், ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் இணைந்து “தி நைட் ரைடர்ஸ்” நிறுவனத்தை உருவாக்கி கொல்கத்தா அணியை வாங்கினர். அதேபோன்று வெஸ்ட் இண்டீசின் நடைபெறும் ட்ரின்பாகோ அணியை அவர்கள் வாங்கியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இவ்விரண்டு அணிகைளையும் தாண்டி புதிய அணியை வாங்கும் திட்டத்தில் அவர்கள் இருக்கின்றனர். அதன்படி முதல் முறையாக தற்போது அமெரிக்காவில் எம்.எல். சி டி20 போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த தொடரில் தி நைட் ரைடர்ஸ் அணியும் இடம்பெற உள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் நைட்ரைடர்ஸ் அணி ஒரு புதிய அணியை வாங்கி போட்டிகளில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

sharukh 2

ஆனால் வழக்கம்போல அணிகளை வாங்கி பங்கேற்பது மட்டுமல்லாமல் போட்டிக்காக அவர்களே முதலீடும் செய்ய வேண்டும். இதனால் அனைத்து அணிகளும் பங்குதாரர்களாக இருப்பார்கள். அமெரிக்கன் கிரிக்கெட் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் எடுத்த முயற்சியால் இந்த எம்.எல்.சி தொடர் நடத்தப்பட உள்ளது. இது குறித்து நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாக இயக்குனரான மைசூர் வெங்கி அளித்த பேட்டியில் கூறும்போது :

- Advertisement -

எம்எல்சி போட்டியில் ஒரு அணியாக மட்டும் எங்களை பார்க்காமல், ஆலோசகராகவும் அவர்கள் கருதுகிறார்கள். அமெரிக்காவின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் உதவும் என்று கூறியுள்ளார். மேலும் அங்குள்ள கிரிக்கெட் வசதிகளையும் ஏற்படுத்தி அடுத்து சில வருடங்களில் 6 கிரிக்கெட் மைதானங்களை உருவாக்குவோம் என்று “தி நைட் ரைடர்ஸ்” நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.

Sharukh

அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் உலகக்கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பதும் அதன் குறிக்கோளாக உள்ளது. இதனால் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டுக்கான நல்ல சூழல் உள்ளது என்றும் மைசூர் வெங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement