டிராவிட் என்னை நேரில் அழைத்து திட்டிய பின்னர் தான் நான் செய்த தவறை உணர்ந்தேன் – இளம்வீரர் ஓபன் டாக்

Rahul
- Advertisement -

இந்திய அணியில் கிட்டத்தட்ட நிரந்தர இடம் பிடித்துவிட்டார் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர். இந்நிலையில் தற்போது ஒரு போட்டி ஒன்றில் தனது இளமைக்காலத்தில் அதிரடியாக ஆடி ராகுல் டிராவிட்டிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை பற்றி பேசியுள்ளார்.

Iyer-1

- Advertisement -

ராகுல் டிராவிட் முன்னிலையில் உள்ளூர் தொடரில் ஆடிக்கொண்டிருந்த போது நிதானமாக ஆடி பொறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் சிக்ஸர் அடித்து சீன் போட்டு இருக்கிறார் ஸ்ரேயாஸ். அதனைக் கண்ட ராகுல் டிராவிட் போட்டி முடிந்தவுடன் இவரை அழைத்து கண்டித்துள்ளார். இது குறித்து பேசியுள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர்.

உலககோப்பை தொடருக்கு முன்னர் வரை இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்னர் வரை அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார் ஸ்ரேயாஸ். சமீபத்தில் அவருக்கு அணியில் இடம் கிடைத்த பின்னர் சற்று பொறுப்பாக ஆடி வருகிறார். இதற்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என்று தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய ஸ்ரேயாஸ் :

Iyer

ஒருநாள் உள்ளூர் போட்டி ஒன்றில் ஆடிக் கொண்டிருந்தேன். 30 ரன்கள் எடுத்திருந்தேன். அப்போதுதான் ராகுல் டிராவிட் என்னை முதன்முதலாக பார்க்கிறார். முதல் நாளின் கடைசி ஓவரை வீசிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அந்த ஓவரை நான் தடுத்து ஆடுவேன் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ஆடி வெளியே வந்து சிக்சரை விளாசினேன் நான்.

- Advertisement -

இதனை மைதானத்திற்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் ராகுல் டிராவிட். அந்த நாள் முடிந்தவுடன் ராகுல் டிராவிட் என்னை அழைத்து பேசினார். ”என்னப்பா பண்ற?’ ‘நாளின் கடைசி ஓவரில் இப்படித்தான் ஆடுவியா? இது தேவையில்லாத வேலை.’ என்று என்னிடம் கூறினார். அப்போது அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஆனால் அந்த அர்த்தத்தை நான் இப்போது உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

Iyer-1

அதன் பின்னரே தற்போது அவரின் ஆலோசனைகளை புரிந்து சர்வதேச போட்டிகளில் என் பொறுப்பை உணர்ந்து ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக ஆடிவருவதாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement