காயத்திலிருந்து மீண்டு வந்து பிப்ரவரி மாதத்தை ஆட்சி செய்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு – ஐ.சி.சி அளித்த கவுரவம்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிப்பதற்காக “மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை” என்ற கௌரவ பட்டத்தை ஐசிசி உருவாக்கியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது கடந்த 12 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆங்கில மாத காலண்டரின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 3 வவையான போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்படும் வீரருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

shreyas iyer

- Advertisement -

இந்த விருதுக்காக அந்த மாதத்தின் முடிவில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஒருசில வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரிந்துரைக்கப் படுவார்கள். இறுதியில் ஐசிசியால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினர் அதில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்து வெற்றியாளரை அறிவிப்பார்கள். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய இந்தியாவின் ஸ்ரேயாஸ் அய்யர், அமீரக நாட்டின் வ்ரிட்யா அரவிந்த் மற்றும் நேபால் நாட்டின் திபேந்தர் சிங் ஆகிய 3 வீரர்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்கள்.

பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் – ஷ்ரேயஸ் ஐயர்:
அதில் கடந்த மாதம் அபாரமாக செயல்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயரை “பிப்ரவரி 2022 மாதத்தின் சிறந்த ஐசிசி வீரர்” என அறிவித்துள்ள ஐசிசி அதற்கான பதிவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கௌரவப்படுத்தி உள்ளது. அதே போல் “பிப்ரவரி 2022 மாதத்தின் சிறந்த ஐசிசி வீராங்கனை” என்ற விருதை நியூசிலாந்தின் எமிலியா கெர் வென்றுள்ளார்.

shreyas 1

கடந்த மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 80 ரன்கள் அடித்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய இருந்தார். அதன்பின் அதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அசத்திய அவர் வெறும் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அதன்பின் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த 3 அரை சதங்கள் அடித்து அபார சாதனை படைத்தார். மொத்தமாக அந்த தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்ற அவர் 204 ரன்களை 174 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்தார்.

- Advertisement -

மிரட்டும் ஷ்ரேயஸ் ஐயர்:
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் 200 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் மற்றும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனையும் படைத்தார். இவரின் அபாரமான செயல்பாடு காரணமாக 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இலங்கையை தோற்கடித்த இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. மொத்தத்தில் பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடிய 9 போட்டிகளில் ஷ்ரேயஸ் ஐயர் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அமர்க்களப் படுத்தினார். அதன் காரணமாகவே தற்போது பிப்ரவரி மாதத்திற்க்கான மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார்.

shreyas iyer 3

வளரும் ஷ்ரேயஸ் ஐயர்:
இன்னும் சொல்ல வேண்டுமெனில் தற்போது இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்று முடிந்த 2-வது டெஸ்ட் போட்டியில் கூட முதல் நாளன்றே தாறுமாறாக சுழன்ற பிட்சில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இதர இந்திய வீரர்கள் தடுமாறிய வேளையில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 92 மற்றும் 67 ரன்களை எடுத்தார். இதன் வாயிலாக பகலிரவு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு மீண்டும் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

இப்படி மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ள இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியில் முதல் முறையாக காலடி வைத்தார். அதன்பின் கடந்த 3 வருடங்களாக ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க தடுமாறி வந்த அவர் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதமும் அரை சதமும் அடித்து சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்திலும் தனது திறனை நிரூபித்த பாஸ்ட் பவுலர் – எங்கயோ போகப்போறாரு

அதன் பின் கடந்த சில மாதங்களாக அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 3 வகையான இந்திய அணியிலும் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்து வளர தொடங்கியுள்ளார். மொத்தத்தில் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரமாக கருதப்படும் இவர் விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement